» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

இளையோர் கிரிக்கெட்: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரை முழுமையாக வென்ற இந்தியா

வெள்ளி 26, செப்டம்பர் 2025 4:45:40 PM (IST)



இளையோர் கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்திய அணி 3-0 என கணக்கில் தொடரை கைப்பற்றி அசத்தியது.

இந்திய இளையோர் கிரிக்கெட் அணி (U-19) ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் (4 நாட்கள்) தொடர்களில் விளையாடுகிறது. இதில் இவ்விரு அணிகளுக்கு இடையே முதலில் ஒருநாள் தொடர் நடைபெற்றது.

இதன் முதல் இரு போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று ஏற்கனவே தொடரை கைப்பற்றி விட்டது. இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான 3வது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 280 ரன்கள் எடுத்தது.

இந்தியா தரப்பில் அதிகபட்சமாக வேதாந்த் திரிவேதி 86 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து 281 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய ஆஸ்திரேலியா 28.3 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 113 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 167 ரன் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்று தொடரை 3-0 என இந்தியா கைப்பற்றி அசத்தியது. இந்தியா தரப்பில் கிளான் படேல் 4 விக்கெட் வீழ்த்தினார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory