» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ஆசியத் தொடர் சம்பளம் ராணுவத்துக்கு நன்கொடை: சூர்ய குமார்

திங்கள் 29, செப்டம்பர் 2025 12:01:59 PM (IST)

ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் தனக்கு வழங்கப்பட்ட சம்பளத்தை பஹல்காம் தாக்குதலில் பலியானோரின் குடும்பத்துக்கும், இந்திய ராணுவத்துக்கும் நன்கொடையாக அளிப்பதாக இந்திய அணியின் கேப்டன் சூர்ய குமார் யாதவ் தெரிவித்துள்ளார்.

ஆசியக் கோப்பையின் இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் நேற்றிரவு மோதிய இந்தியா அணி, 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில், ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவரும் பாகிஸ்தான் உள்துறை அமைச்சருமான மோஷின் நக்வி கைகளால் கோப்பையை வாங்க இந்திய வீரர்கள் மறுப்பு தெரிவித்தனர்.

இதனால் கோப்பையை இந்திய அணிக்கு வழங்காமல் நிர்வாகத்தினர் எடுத்துச் சென்றனர். தொடர்ந்து, கோப்பை இல்லாமல் வெற்றியை இந்திய வீரர்கள் கொண்டாடினர். இந்த நிலையில், செய்தியாளர்களுடன் சூர்ய குமார் யாதவ் பேசியதாவது: "நான் கிரிக்கெட் விளையாடத் தொடங்கியதிலிருந்து வெற்றி பெற்ற அணிக்கு கோப்பை வழங்கப்படாததை நான் பார்த்ததில்லை. இதனால் நாங்கள் ஏமாற்றமடையவில்லை. கூடுதல் மகிழ்ச்சியுடனே மேடையில் வெற்றியைக் கொண்டாடினோம்.

நக்வியிடமிருந்து கோப்பையைப் பெறுவதில்லை என்ற முடிவு வீரர்களால் எடுக்கப்பட்டது, நிர்வாகிகளால் அல்ல. என்னுடைய கோப்பைகள் ஓய்வறையில் ஓய்வெடுத்துக் கொண்டுள்ளன. எனது அணியின் 14 வீரர்களும் பயிற்சியாளர்களுமே எனது கோப்பைகள்.

ஆசியக் கோப்பை தொடர் முழுவதும் நான் பெற்ற போட்டி சம்பளத்தை இந்திய ராணுவத்துக்கு நன்கொடை அளிக்க விரும்புகிறேன்” எனத் தெரிவித்தார். தொடர்ந்து எக்ஸ் தளத்தில் பதிவிட்ட சூர்ய குமார், போட்டிகளின் சம்பளத்தை பஹல்காம் தாக்குதலில் பலியானோரின் குடும்பத்துக்கும், இந்திய ராணுவத்துக்கும் நன்கொடையாக அளிக்கவிருப்பதாக தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory