» சினிமா » செய்திகள்
மமிதா பைஜுவை அடித்தேனா? இயக்குனர் பாலா விளக்கம்
புதன் 1, ஜனவரி 2025 11:55:37 AM (IST)

நடிகை மமிதா பைஜுவை அடித்ததாக வெளியான தகவலுக்கு திரைப்பட இயக்குனர் பாலா விளக்கம் அளித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முண்ணனி இயக்குனராக வலம் வருபவர் பாலா. இவரது இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள படம் வணங்கான். அருண் விஜய் ஹீரோவாக நடித்திருக்கும் இப்படம் வருகிற பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இப்படப்பிடிப்பின்போது நடிகை மமிதா பைஜுவை இயக்குனர் பாலா தாக்கியதாக இணையத்தில் தகவல் பரவி வந்தது. இதனால்தான் மமிதா இப்படத்திலிருந்து விலகியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இந்த தகவலுக்கு இயக்குனர் விளக்கம் கொடுத்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், "மமிதா பைஜு எனக்கு மகள் மாதிரி. அவரை எப்படி நான் தாக்கி இருப்பேன். பாம்பேயில் இருந்து வந்த மேக்கப் கலைஞர் எனக்கு தெரியாமல் மமிதா பைஜுவிற்கு மேக்கப் போட்டு விட்டுவிட்டார். எனக்கு மேக்கப் போட்டால் பிடிக்காது என்று அவருக்கு தெரியவில்லை. மமிதாவிற்கும் சொல்ல தெரியவில்லை. அப்போது யார் மேக்கப் போட்டது என கேட்டு, கையைதான் ஓங்கினேன். அதன்பின் நான் மமிதா பைஜுவை அடித்துவிட்டேன் என செய்தி கிளம்பிவிட்டது." என்றார்
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அயோத்தி பட தெலுங்கு ரீமேக்கில் நாகார்ஜுனா
புதன் 9, ஜூலை 2025 12:20:22 PM (IST)

நடன இயக்குநர் சாண்டி பிறந்தநாள்: ரஜினிகாந்த் வாழ்த்து!
திங்கள் 7, ஜூலை 2025 5:13:10 PM (IST)

20 வருடங்களுக்கு பிறகு எஸ்.ஜே சூர்யா இயக்கும் படத்திற்கு இசையமைக்கும் ஏ.ஆர் ரஹ்மான்!
திங்கள் 7, ஜூலை 2025 5:08:58 PM (IST)

த்ரிஷ்யம் ரீமேக்கில் ரஜினி நடிக்காதது ஏன்? இயக்குநர் ஜீத்து ஜோசப் பகிர்வு
வெள்ளி 4, ஜூலை 2025 4:35:23 PM (IST)

கூலி திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா தேதி முடிவு?
புதன் 2, ஜூலை 2025 5:03:17 PM (IST)

ஏ.ஆர். ரஹ்மானுடன் மத்திய அமைச்சர் எல். முருகன் சந்திப்பு!
திங்கள் 30, ஜூன் 2025 5:32:42 PM (IST)
