» சினிமா » செய்திகள்

நடிகர் விஷாலுக்கு உடல்நலக்குறைவு : மருத்துவர் விளக்கம்

செவ்வாய் 7, ஜனவரி 2025 9:03:56 PM (IST)

நடிகர் விஷாலுக்கு திடீர்உடல் நலக்குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்றார். 

சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடிப்பில் கடந்த 2012-ம் ஆண்டு உருவான ‘மதகஜராஜா’ படம் சில பிரச்சினைகளால் நீண்ட காலமாக திரைக்கு வராமல் இருந்தது. 12 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு பொங்கலுக்கு திரைக்கு வரும் என்று அறிவித்துள்ளனர்.

இந்த நிலையில் சென்னையில் நடந்த பட நிகழ்ச்சியில் விஷால் பங்கேற்று பேசும்போது, அவரது கை மற்றும் உடல் நடுங்க தொடங்கியது. இதைப் பார்த்து விழாவில் பங்கேற்ற அனைவரும் அதிர்ச்சியானார்கள். விஷால் கை, கால் நடுங்கும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. பலரும் அவரது உடல் நலம் குறித்து விசாரிக்க தொடங்கினர்.

இது சமூக ஊடகங்களில் விவாதத்திற்குரிய தலைப்பாக மாறிய நிலையில், நடிகரின் மருத்துவர் அவர் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சிகிச்சை மற்றும் முழுமையான படுக்கை ஓய்வை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தினார். சில நெட்டிசன்கள் நடிகரின் உடல்நிலை சரியில்லாமல் இந்த நிகழ்வில் கலந்துகொள்வதற்கான அர்ப்பணிப்பையும் பாராட்டினர்.

முன்னதாக பட விழாவில் நடிகை குஷ்பு பேசும்போது, ‘‘விஷாலும், நானும் நெருங்கிய நண்பர்கள். நட்புக்கு மரியாதை கொடுப்பவர் விஷால். வார்த்தைகள் அவரது மனசில் இருந்து அப்படியே வரும். ‘மதகஜராஜா’ படம் மாஸ் ஆன பொழுதுபோக்கு படமாக இருக்கும்" என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory