» சினிமா » செய்திகள்
விக்னேஷ் சிவனுடன் விவாகரத்தா? நயன்தாரா விளக்கம்!
வியாழன் 10, ஜூலை 2025 5:41:10 PM (IST)

விவகாரத்து தொடர்பாக வெளியான வதந்திகளுக்கு நடிகை நயன்தாரா விளக்கம் அளித்துள்ளார்.
இயக்குநர் விக்னேஷ் சிவனும் நடிகை நயன்தாராவும் கடந்த 2022 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். நீண்டகாலமாகக் காதலித்து வந்த இந்த இணை, பிரம்மாண்டமான முறையில் திருமணம் செய்ததுடன் தங்களின் திருமண நிகழ்வை ஆவணப்படுத்தி நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியிட்டனர்.
தொடர்ந்து, வாடகைத் தாய் மூலம் இந்த இணைக்கு இரு ஆண் குழந்தைகள் பிறந்தன. அவர்களுக்கு உயிர், உலக் எனப் பெயரிட்டுள்ளனர். இந்த நிலையில், கடந்த சில நாள்களாக சமூக வலைதளங்களில் விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் விவாகரத்து முடிவில் இருப்பதாக நிறைய வதந்திகள் பரவின. மேலும், சில செய்தி நிறுவனங்களும் செய்திகளாக மாற்றி வெளியிட்டன.
தற்போது, இந்த வதந்திகளுக்குப் பதிலளிக்கும் விதமாக நயன்தாரா தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விக்னேஷ் சிவனுடன் வேடிக்கைப் பார்க்கும் கோணத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தைப் பகிர்ந்து, "எங்களைக் குறித்த வதந்திகளைப் பார்க்கும்போது எங்களின் ரியாக்ஷன்” என நகைச்சுவையாகப் பதிலளித்துள்ளார். இதன் மூலம், இருவருக்கும் இடையே எந்தப் பிரச்னையும் இல்லை என்று மறைமுகமாக தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பாகுபலி 1, 2 பாகங்கள் மறுவெளியீடு: தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!
வியாழன் 10, ஜூலை 2025 5:34:40 PM (IST)

அயோத்தி பட தெலுங்கு ரீமேக்கில் நாகார்ஜுனா
புதன் 9, ஜூலை 2025 12:20:22 PM (IST)

நடன இயக்குநர் சாண்டி பிறந்தநாள்: ரஜினிகாந்த் வாழ்த்து!
திங்கள் 7, ஜூலை 2025 5:13:10 PM (IST)

20 வருடங்களுக்கு பிறகு எஸ்.ஜே சூர்யா இயக்கும் படத்திற்கு இசையமைக்கும் ஏ.ஆர் ரஹ்மான்!
திங்கள் 7, ஜூலை 2025 5:08:58 PM (IST)

த்ரிஷ்யம் ரீமேக்கில் ரஜினி நடிக்காதது ஏன்? இயக்குநர் ஜீத்து ஜோசப் பகிர்வு
வெள்ளி 4, ஜூலை 2025 4:35:23 PM (IST)

கூலி திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா தேதி முடிவு?
புதன் 2, ஜூலை 2025 5:03:17 PM (IST)
