» சினிமா » செய்திகள்

ஆயிரம் திரைப்படங்களுக்கு மேல் டப்பிங்: நடிகர் சாய்குமார் சாதனை!!

புதன் 5, நவம்பர் 2025 3:55:00 PM (IST)

தனது 50 வருட சினிமா வாழ்க்​கை​யில் என்​.டி.ஆர், அமிதாப், ரஜினி, மம்மூட்டி படங்கள் உள்பட ஆயிரம் திரைப்படங்களுக்கு டப்பிங் பேசியுள்ளதாக நடிகர் சாய்குமார் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் கூறும்​போது, "14 வயதிலேயே நடிக்க வந்​து​விட்​டேன். "தேவுடு சேசினா பெல்​லி” என்ற தெலுங்கு படத்​தில் பார்​வையற்ற சிறுவனாக நடித்​தேன். மூத்த நடிகர்​களு​ட​னும் அதில் நடிக்க வேண்​டி​யிருந்​தது. அப்​போது அது அவ்​வளவு எளி​தானதல்ல. என் பெற்றோர் அப்​போது எனக்​குச் சொன்​னது, ‘இயக்​குநரின் நடிக​னாக இரு’ என்​ப​தைத்​தான்.

அதை இப்​போது​வரை பின்​பற்றி வரு​கிறேன். என் பெற்​றோர் புகழ்​பெற்ற டப்​பிங் கலைஞர்​களாக இருந்​த​தால் 1973- ம் ஆண்​டிலேயே டப்​பிங் வேலையை தொடங்​கி​விட்​டேன். தெலுங்கு சூப்​பர் ஸ்டார் என்​.டி.​ராம​ராவ் போன்ற ஜாம்​ப​வான்​களுக்கு டப்​பிங் பேசினேன். விஷ்ணுவர்​தன், ரஜினி​காந்த், மம்​மூட்​டி, மோகன்​லால், அமி​தாப் பச்​சன், சில்​வெஸ்​டர் ஸ்டலோன் போன்ற புகழ்​பெற்ற நடிகர்​களுக்கு அவர்​கள் படங்​களின் தெலுங்கு பதிப்​பிற்கு டப்​பிங் பேசி​யிருக்​கிறேன்.

சிரஞ்​சீ​வி, நாகார்​ஜுனா போன்ற தெலுங்கு நட்​சத்​திரங்​களுக்​கு, அவர்​களின் தமிழ்ப் பதிப்​பு​களுக்கு நானே டப்​பிங் பேசினேன்.50 ஆண்​டு​களுக்​குப் பிறகும், எனக்கு இன்​னும் அதிக ஏக்​கம் இருக்​கிறது. தேசிய விருதை வெல்ல விரும்​பு​கிறேன், ஆஸ்​கர் விருதை​யும் வெல்ல விரும்​பு​கிறேன். பாகுபலி, கே.ஜி.எஃப், காந்​தாரா போன்ற பெரிய படங்​களின் ஒரு பகு​தி​யாக இருக்க விரும்​பு​கிறேன். அந்த ஆசை இன்​னும் நிறைவேற​வில்​லை'' என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory