» சினிமா » செய்திகள்
மீண்டும் இணையும் ரஜினி - சுந்தர்.சி காம்போ: கமல்ஹாசன் அறிவிப்பு!
வியாழன் 6, நவம்பர் 2025 10:17:28 AM (IST)

கமல்ஹாசன் தயாரிப்பில், ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை சுந்தர்.சி. இயக்குகிறார். இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
‘அருணாச்சலம்’ படத்துக்குப் பிறகு 28 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சுந்தர்.சி - ரஜினி காம்போ இணைகிறது. இது குறித்து கமல்ஹாசன் வெளியிட்ட பதிவில், "காற்றாய் மழையாய் நதியாய் பொழிவோம் மகிழ்வோம் வாழ்வோம்! ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேசஷல் தயாரிப்பில் சுந்தர்.சி இயக்கத்தில் இனிய நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ‘தலைவர் 173 படம் 2027-ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும்” என்று தெரிவித்துள்ளார்.
இப்படத்தின் மூலம், சுந்தர்.சி இயக்கத்தில் 28 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினிகாந்த் மீண்டும் நடிக்க இருக்கிறார். சுந்தர்.சி - ரஜினிகாந்த் கூட்டணியில் 1997-ம் ஆண்டு உருவான படம் அருணாச்சலம். அது மிகப் பெரிய வெற்றிப் படமாக அமைந்தது என்பது குறிப்பிட்டத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஆயிரம் திரைப்படங்களுக்கு மேல் டப்பிங்: நடிகர் சாய்குமார் சாதனை!!
புதன் 5, நவம்பர் 2025 3:55:00 PM (IST)

சுந்தர்.சி இயக்கத்தில் விஷால்: அதிகாரபூர்வமாக அறிவிப்பு
செவ்வாய் 4, நவம்பர் 2025 4:32:42 PM (IST)

நடிகர்கள் அரசியலுக்கு வரலாம்... ஆனால் அரசியலில் நடிக்கக் கூடாது’ - சரத்குமார்
திங்கள் 3, நவம்பர் 2025 9:31:13 PM (IST)

கரூர் சம்பவத்திற்கு ஒருவர் மட்டுமே பொறுப்பல்ல: ஊடகங்களுக்கும் பங்கு உண்டு: அஜித்குமார்
சனி 1, நவம்பர் 2025 10:27:43 AM (IST)

இயக்குநருடன் விஷால் மோதல் எதிரொலி : மகுடம் படப்பிடிப்பு நிறுத்தம்!
வெள்ளி 31, அக்டோபர் 2025 3:36:30 PM (IST)

ரஜினியின் ஜெயிலர் 2 படத்தில் வித்யா பாலன்!
புதன் 29, அக்டோபர் 2025 12:38:59 PM (IST)

