» சினிமா » செய்திகள்

நடிகை வனிதா படத்தில் அனுமதியின்றி பாடல் : வழக்கு தொடர்ந்தார் இளையராஜா!

வெள்ளி 11, ஜூலை 2025 12:35:37 PM (IST)



நடிகை வனிதாவின் ‘Mrs & Mr’ படத்தில் தான் இசையமைத்த பாடலை அனுமதி இல்லாமல் பயன்படுத்தியதாக இளையராஜா வழக்கு தொடர்ந்துள்ளார். 

நடிகை வனிதா விஜயகுமார் இயக்கிய புதிய திரைப்படம் ‘Mrs & Mr’. இந்தப் படத்தை வனிதா மகள் ஜோவிகா தயாரித்துள்ளார். இந்த படத்தில் வனிதாவுக்கு ஜோடியாக டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் நடித்துள்ளார். மேலும் ஷகிலா, பவர் ஸ்டார் சீனிவாசன், பாத்திமா, செஃப் தாமு, ஸ்ரீமன், உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். ‘Mrs & Mr’ திரைப்படம் இன்று வெளியானது.

இந்நிலையில் ‘Mrs & Mr’ திரைப்படத்திற்கு எதிராக இசையமைப்பாளர் இளையராஜா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இளையராஜா தரப்பில் வழக்கறிஞர் சரவணன் நீதிபதி செந்தில் குமார் ராமமூர்த்தி முன் அவசர முறையீடு செய்துள்ளார்.

அதில், ‘Mrs & Mr’ படத்தில் ‘ராத்திரி சிவராத்திரி’ என்ற தனது பாடல் பயன்படுத்தப்பட்டுள்ளது எனவும் தான் இசையமைத்த பாடலை அனுமதி இல்லாமல் பயன்படுத்தியதாகவும் மனுவில் இளையராஜா குற்றம்சாட்டியுள்ளார். சென்னை உயர்நீதிமன்றத்தில் இவ்வழக்கு திங்கள் கிழமை விசாரணைக்கு வருகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory