» சினிமா » செய்திகள்
பாலியல் குற்றச்சாட்டை சட்டப்படி எதிர்கொள்வேன்: விஜய் சேதுபதி
வெள்ளி 1, ஆகஸ்ட் 2025 3:41:46 PM (IST)
தன் மீதான பாலியல் குற்றச்சாட்டை சட்டப்படி எதிர்கொள்ள முடிவு செய்துள்ளதாக நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்தார்.
அண்மையில் ரம்யா மோகன் என்பவர், தனக்குத் தெரிந்த ஒரு பெண்ணை விஜய் சேதுபதி பல ஆண்டுகள் பாலியல் இன்பத்திற்காகப் பயன்படுத்திக் கொண்டதாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். அதில், கோலிவுட்டின் காஸ்டிங் கவுச் சம்பவங்களுக்கும் விஜய் சேதுபதிக்கும் தொடர்பு இருக்கிறது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், கடந்த சில ஆண்டுகளாக ஒரு பெண் விஜய் சேதுபதியால் பயன்படுத்தப்பட்டதாகவும், இப்போது அந்த பெண் மறுவாழ்வு மையத்தில் இருப்பதாகவும் அந்த பதிவில் பகிரப்பட்டிருந்தது.
விஜய் சேதுபதி, கேரவனுக்கு வருவதற்காக அந்த பெண்ணுக்கு ரூ.2 லட்சத்தையும், கேரவன் ஓட்டுபவர்களுக்கு ரூ.50 ஆயிரம் தருவதாகவும் அந்த பதிவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இது வைரலான சில மணி நேரங்களில், அந்த பதிவு சம்பந்தப்பட்ட பக்கத்தில் இருந்து நீக்கப்பட்டது. இதற்கு மீண்டும் விளக்கம் கொடுத்த ரம்யா மோகன், சம்பந்தப்பட்ட பெண்ணின் பாதுகாப்பிற்காக இந்த பதிவுகளை நீக்குவதாக குறிப்பிட்டிருந்தார்.
இது குறித்து விஜய் சேதுபதி "என்னை பற்றி கொஞ்சம் தெரிந்தவர்களுக்கு கூட, இது உண்மை இல்லை என்று தெரியும். அவர்களே இதை பார்த்தால் சிரிப்பார்கள். எனக்கும் என்னைப் பற்றி தெரியும். இது போன்ற அசிங்கமான குற்றச்சாட்டுகள் என்னை பாதிக்காது. என்னை சேர்ந்தவர்களும், எனது குடும்பத்தினரும் இதனால் மன உளைச்சளுக்கு ஆளாகியிருக்கின்றனர். இதை அப்படியே விட்டுவிடுங்கள். அந்த பெண் தன்னை பற்றி அனைவரும் பேச வேண்டும் என்பதற்காக இப்படி செய்கிறார்.
இதனால் அவருக்கு சில நிமிடங்கள் புகழ் கிடைக்கிறது, அதை அனுபவித்துக்கொள்ளட்டும். தான் நடித்த படம் நன்றாக ஓடிக்கொண்டிருக்கும் வேளையில், இவ்வாறு அவதூறு பரப்புவதன் மூலம் அப்படத்தின் வெற்றி பாதிக்கப்படும் என சிலர் நினைத்திருக்கக்கூடும் என்றும் ஆனால் அவ்வாறு நடக்காது.
இன்றைய சூழலில் ஒரேயொரு சமூக ஊடகக் கணக்கு இருந்தால் யார் வேண்டுமானாலும் யாரைப் பற்றியும் எதையும் கூறலாம். பாலியல் குற்றச்சாட்டை சட்டப்படி எதிர்கொள்ள முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்தார். இது குறித்து சைபர் கிரைமில் விஜய் சேதுபதி தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சுந்தர்.சி இயக்கத்தில் விஷால்: அதிகாரபூர்வமாக அறிவிப்பு
செவ்வாய் 4, நவம்பர் 2025 4:32:42 PM (IST)

நடிகர்கள் அரசியலுக்கு வரலாம்... ஆனால் அரசியலில் நடிக்கக் கூடாது’ - சரத்குமார்
திங்கள் 3, நவம்பர் 2025 9:31:13 PM (IST)

கரூர் சம்பவத்திற்கு ஒருவர் மட்டுமே பொறுப்பல்ல: ஊடகங்களுக்கும் பங்கு உண்டு: அஜித்குமார்
சனி 1, நவம்பர் 2025 10:27:43 AM (IST)

இயக்குநருடன் விஷால் மோதல் எதிரொலி : மகுடம் படப்பிடிப்பு நிறுத்தம்!
வெள்ளி 31, அக்டோபர் 2025 3:36:30 PM (IST)

ரஜினியின் ஜெயிலர் 2 படத்தில் வித்யா பாலன்!
புதன் 29, அக்டோபர் 2025 12:38:59 PM (IST)

போலி ஆடிஷன் அழைப்புகள்: இயக்குநர் பா. ரஞ்சித்தின் நீலம் நிறுவனம் எச்சரிக்கை!
புதன் 29, அக்டோபர் 2025 11:55:44 AM (IST)

