» சினிமா » செய்திகள்
தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு: பார்க்கிங் படத்துக்கு 3 விருது!
சனி 2, ஆகஸ்ட் 2025 12:21:01 PM (IST)

71வது தேசிய திரைப்பட விருதுகள் பட்டியலில் பார்க்கிங் தமிழ திரைப்படத்திற்கு 3 தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டு உள்ளது.
கடந்த 2023ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழில் வெளியான 'பார்க்கிங்' படத்துக்கு 3 தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. சிறந்த படம், சிறந்த திரைக்கதைக்காக இந்த படம் தேர்வாகியது. மேலும், இதில் நடித்த எம்.எஸ்.பாஸ்கர் சிறந்த துணை நடிகர் விருதை பெறுகிறார்.
சினிமாத்துறையில் ஒவ்வொரு பிரிவிலும் சிறந்து விளங்கும் கலைஞர்களை ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு,தேசிய விருது வழங்கி கவுரவித்து வருகிறது. இந்திய சினிமாத்துறையில் இந்த விருது உயரிய விருதாக கருதப்படுகிறது. 2023ம் ஆண்டுக்கான 71வது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. பல வாரங்களாக நடந்த ஆலோசனைக்கு பிறகு பட்டியலை நடுவர் குழு, தேர்வுக்குழுவிடம் அளித்தது. இதன்படி இந்த விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன.
ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கிய தமிழ் படமான 'பார்க்கிங்' படம் சிறந்த திரைப்படமாக தேர்வானது. இந்தப்படத்தில் ஹரீஸ் கல்யாண், எம்எஸ் பாஸ்கர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சிறந்த திரைக்கதைக்கான விருதையும் இந்த படம் பெறுகிறது. இந்தப் படத்தில் நடித்த எம்.எஸ்.பாஸ்கர் சிறந்த துணை நடிகருக்கான விருதை பெறுகிறார்
2023ஆம் ஆண்டு வெளியான திரைப்படங்களில், சிறந்த நடிகர் விருதினை ஹிந்தி நடிகர் ஷாருக் கான் வென்றுள்ளார். 12th பெயில் திரைப்படத்தில் நடித்த விக்ராந்த் மாசிக்கும் 2023ஆம் ஆண்டுக்கான சிறந்த நடிகருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த நடிகருக்கான தேசிய விருதினை இருவரும் பகிர்ந்துகொள்கிறார்கள்.
71-ஆவது தேசிய விருதுகள் விவரம்
தைபேயி - பய் டங் ஸ்டெப் ஆஃப் ஹோப்
தெலுங்கு - பகவந்த் கேசரி
தமிழ் - பார்க்கிங்
பஞ்சாபி - கால் ஆஃப் எக்சைட்மெண்ட்
ஒடிசா - புஷ்கரா
மராத்தி - ஷியாமச்சி ஆய்
மலையாளம் - உள்ளொழுக்கு
கன்னடம் - கண்டீலு - தி ரே ஆஃப் ஹோப்
சிறந்த படம்: 12th ஃபெயில்
சிறந்த நடிகர்: ஷாருக் கான்
சிறந்த நடிகை: ராணி முகர்ஜி
சிறந்த இசையமைப்பாளர்: ஜி.வி. பிரகாஷ்
சிறந்த பின்னணி இசை : ஹர்ஷவர்தன் ரமேஷ்வர்
சிறந்த துணை நடிகர் : எம்.எஸ். பாஸ்கர் (பார்க்கிங்)
சிறந்த துணை நடிகை : ஊர்வசி (உள்ளொழுக்கு)
சிறந்த பின்னணிப் பாடகர் : சாலியா (ஜவான்), ரோஹித் (பிரேமிஸ்துன்னா)
சிறந்த பாடலாசிரியர்: கசாரளா ஷ்யாம்
சிறந்த சண்டைப் பயிற்சியாளர்: நந்து - பிருத்வி
சிறந்த படத் தொகுப்பு: மிதுன் முரளி
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சுந்தர்.சி இயக்கத்தில் விஷால்: அதிகாரபூர்வமாக அறிவிப்பு
செவ்வாய் 4, நவம்பர் 2025 4:32:42 PM (IST)

நடிகர்கள் அரசியலுக்கு வரலாம்... ஆனால் அரசியலில் நடிக்கக் கூடாது’ - சரத்குமார்
திங்கள் 3, நவம்பர் 2025 9:31:13 PM (IST)

கரூர் சம்பவத்திற்கு ஒருவர் மட்டுமே பொறுப்பல்ல: ஊடகங்களுக்கும் பங்கு உண்டு: அஜித்குமார்
சனி 1, நவம்பர் 2025 10:27:43 AM (IST)

இயக்குநருடன் விஷால் மோதல் எதிரொலி : மகுடம் படப்பிடிப்பு நிறுத்தம்!
வெள்ளி 31, அக்டோபர் 2025 3:36:30 PM (IST)

ரஜினியின் ஜெயிலர் 2 படத்தில் வித்யா பாலன்!
புதன் 29, அக்டோபர் 2025 12:38:59 PM (IST)

போலி ஆடிஷன் அழைப்புகள்: இயக்குநர் பா. ரஞ்சித்தின் நீலம் நிறுவனம் எச்சரிக்கை!
புதன் 29, அக்டோபர் 2025 11:55:44 AM (IST)

