» சினிமா » செய்திகள்

அடுத்து அரசியல் களம்? சினிமாவிலிருந்து விலகுகிறாரா த்ரிஷா?

வெள்ளி 20, மார்ச் 2026 10:35:50 AM (IST)

தமிழ் திரையுலகின் 'எவர்கிரீன்' நாயகியாக வலம் வரும் த்ரிஷா, கடந்த மூன்று மாதங்களாகப் புதிய படங்கள் எதிலும் ஒப்பந்தமாகாதது, அவர் திரையுலகை விட்டு விலகுகிறாரா என்ற விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

கடந்த 2002-ம் ஆண்டு சூர்யா நடித்த 'மௌனம் பேசியதே' படத்தின் மூலம் அறிமுகமான த்ரிஷா, கடந்த 24 ஆண்டுகளாகத் தென்னிந்தியத் திரையுலகின் தவிர்க்க முடியாத நட்சத்திரமாகத் திகழ்கிறார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், ஹிந்தி எனப் பல மொழிகளில் ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்து முத்திரை பதித்துள்ளார்.

சமீபத்தில் விஜய்யுடன் 'லியோ' (2023), மணிரத்னம் இயக்கத்தில் 'தக் லைஃப்' மற்றும் அஜித்துடன் 'விடாமுயற்சி' (2025) எனப் பெரிய பட்ஜெட் படங்களில் நடித்து முடித்துள்ளார். சமீபகாலமாக த்ரிஷாவைச் சுற்றிப் பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன.

ஏ.ஜி.எஸ். தயாரிப்பு நிறுவன இல்லத் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யுடன் ஒரே நிற உடையில், ஒரே காரில் த்ரிஷா சென்றது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. தனியார் நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் பார்த்திபன் த்ரிஷா குறித்துக் கூறிய கருத்துகளும் சர்ச்சையாகின.

இந்தச் சூழலில், 42 வயதாகும் த்ரிஷா திடீரெனப் புதிய படங்களை நிராகரித்து வருவது, அவர் அரசியலில் நுழையப் போகிறாரா அல்லது முழுநேர சினிமாவில் இருந்து ஓய்வு பெறப் போகிறாரா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. த்ரிஷா இதுவரை 75 படங்களில் நடித்துள்ளார். தற்போது அவர் கைவசம் பின்வரும் படங்கள் உள்ளன:

கருப்பு: நீண்ட இடைவேளைக்குப் பிறகு சூர்யாவுடன் இணைந்து நடித்துள்ள இப்படம் வரும் மே மாதம் வெளியாகிறது.

விஸ்வம்பரா: சிரஞ்சீவியுடன் இணைந்து நடித்துள்ள தெலுங்குப் படம்.

ராம்: மோகன்லாலுடன் நடித்துள்ள மலையாளத் திரைப்படம்.

மர்மம் நீடிக்கும் திடீர் முடிவு: சமீபத்தில் தெலுங்கு இயக்குநர் ஒருவரின் படத்தையும், சில முன்னணி ஓடிடி (OTT) தொடர்களையும் த்ரிஷா நிராகரித்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.   "ஏற்கனவே ஒப்புக்கொண்ட படங்களை முடித்துக் கொடுத்துவிட்டு, புதிய கதைகளைக் கேட்க த்ரிஷா ஆர்வம் காட்டவில்லை" எனத் திரைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

இதனால் த்ரிஷாவின் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பதை அறிய ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory