திருநெல்வேலியின் தாமிரபரணி வரலாறு (30 of 53)
நீராட வேண்டிய மாதம்
பாபநாச தீர்த்தம், அகத்தியர் தீர்த்தம், பாண தீர்த்தம், கல்யாண தீர்த்தம் போன்ற தீர்ததத்தில் சித்திரை மாதம் மற்றும் ஆடி மாதம் நீராடுவது நல்லது. திருப்புடைமருதூரில் உள்ள சுரேந்திர மோட்ச தீர்த்தத்தில் வைகாசி மாதமும், அதே ஊரில் உள்ள சோமதீர்த்தத்தில் ஆனி மாதம் நீராடி நற்பயன் அடையலாம். சிந்துபூந்துறையில் உள்ள தீர்த்தத்தில் ஆவணி மாதமும், திருவைகுண்டம் விஷணு தீர்த்தத்தில் புரட்டாசி மாதமும நீராடினால் நற்கதி கிடைக்கும்.
ஐப்பசி மாதம் ஆழ்வார்திருநகரியில் உள்ள துர்க்கா தீர்த்தத்தில் குளிப்பது மிக்க நன்று. இரட்டை திருப்பதி ஜடாசல தீர்த்தத்தில் கார்த்திகை மாதத்திலும், சேரன்மகாதேவி வியாசர் தீர்த்தத்தில் மார்கழி மாதத்திலும் (சேரன்மகாதேவியில் ரெயிலில் வரும் போது தூரத்தில் தெரியும் படித்துறை) நீராடி பலன் பெறலாம். செப்பறை புரட்டன தீர்த்தம், பாலாமடை மகா தீர்த்தம் ஆகிய இடத்தில் மாசி மாதமும், பச்சையாறு சங்கமிக்கும் தருவை மந்திர தீர்த்தத்தில் பங்குனி மாதமும் புனித நீராடினால் நாம் நன்மை அடைந்து கொள்ளலாம்.
அது மட்டுமல்லாமல் தாமிரபரணி தோன்றிய வைகாசி விசாகம் அன்று தாமிபரணியில் குளித்தால் கும்பகோணம் மகாமகத்தில் குளித்த புண்ணியம் கிட்டும். அன்று முருகப்பெருமான் பிறந்தநாள் என்பதால் நெல்லை குறுக்குத்துறையில் குளித்தால் அறுபடை வீடுகளுக்கும் சென்று வந்த புண்ணியம் கிட்டும். இன்று தான் குபேரன் தான் இழந்த சொத்தை தாமிரபரணியில் குளித்து பின் திருக்கோ@ர் பெருமானிடம் பெற்றான் என்று புராணங்கள் கூறுகிறது.

எல்லா சகல பாவங்களையும் நீக்க வல்ல தீர்த்தம் எல்லா மாதங்களிலும் மக்கள் நீராட கூடிய தீர்த்தம் பாபநாச தீர்த்தம். கல்யாண தீர்த்தம், அகத்திய தீர்த்தம் ஆகிய மூன்று தீர்த்தமும் தான். இதில் கல்யாண தீர்த்தில் நேரடியாக குளிக்க முடியாவிட்டாலும் ஒரு இடத்தில் நின்று குளிக்கலாம். இதில் மகவும் விசேசமாக கருதப்படும் அகத்தியர் தீர்த்ததிலும் , பாபநாச தீர்த்திலும் வருடத்தில் எந்த நாளிலும் குளிக்கலாம்.
தாமிரபரணி பிறந்த நாள்
தாமிரபரணியை அனைவரும் பரணி நட்சத்திரத்தில் பிறந்தவள் என்று கூறுகிறார்கள். ஆனால் தாமிரபரணி பிறந்தது வைகாசி விசாகம் தான் என்று தாமிரபரணி மகாத்மியம் கூறுகிறது. இந்த நாளில் தான் நம்மாழ்வார் அவதரித்தார். சிவபெருமான் திருமணகாட்சியை அகத்தியர் சித்திரை திருநாளில் காண்கிறார். பின் அவர் பொதிகை மலையில் சென்று தனது கமண்டல நீரை தாமிரபரணியாக உருவாக்குகிறார். அதன்படி தாமிபரணி வைகாசி விசாகத்தில் பிறந்தாள் என்பது சரியாகத்தான் உள்ளது. ஆனால் பரணி தாய் பிறந்து எத்தனை வருடம் ஆகியிருக்கும் என்பதைதான் கணிக்க முடியவில்லை.
சிவசைலம்
சிவசைலத்தில் சிவசைலம் நாதர் - பரமகல்யாணியை பிரதிட்சை செய்தவர் கோரக்கமாமுனிவா. இந்த சிவாலயம் மேற்கு பார்த்து அமைந்துள்ளது. அதற்கு காரணம் அத்ரியாரின் வேண்டுகோளே யாகும். முன்னொரு காலத்தில் அத்ரி மகிரிஷி இருந்த கூடத்தில் சிவபூஜை செய்து வந்தார். அத்ரியாரின் பூஜைக்கு இணங்கி சிவபெருமான் காட்சி கொடுத்தார். அப்போது சிவபெருமான் மேற்கு நோக்கி அத்ரியாருக்கு காட்சி கொடுத்தார். பின் இந்த இடத்தில் எனககொரு கோயில் கட்டு இந்த கோயில் வந்து கும்பிடுவோருக்கு நான் வேண்டும் வரம் தருவேன் என்று சிவபெருமான் வாக்குரைத்தார்.
அதன்படி இந்தகோவிலை அத்ரி மகரிஷி மேற்கு பார்த்து கட்டினார். இதே போல் தாமிரபரணி நதிக்கரையில் செப்பரை கோவில் அருகே நடராஜனின் நடனம் காண அக்னி பகவான் அமைத்த மேற்கு பார்த்த சிவாலயமும், குரும்பூர் அருகே அங்கமங்கலத்தில் உள்ளமேற்கு பார்த்த சிவாலயமும் அமைந்து உள்ளது. மேலும் கோடக நல்லூரிலும் , கல்லிடைக்குறிச்சியிலும் மேற்கு பார்த்த சிவலாயம் உள்ளது.
பிரிட்டீஷ் ஆய்வு
பாபநாசம் தீர்த்த பெருமையை பற்றி கூறும் போது நாம் புராணகதையை மட்டும் மேற்கோள் காட்டாமல் வெள்ளையர்கள் ஆட்சி காலத்தில் நடந்த சம்பவத்தினையும் கூற வேண்டும். முன்பு தாமிரபரணி ஆற்றில் பிரிட்டிஷ் அரசு ஆய்வு செய்தது. அப்போது அறிவியல் ரிதியாக தாமிரபரணியில் தாமிரசத்து உள்ளது என்பதையும் ஊர்ஜிதம் செய்து உள்ளனர்.
மேலும், இந்நீரில் மூலிகை குணமும் உள்ளது என ஆய்வின் இறுதி அறிக்கை கூறியுள்ளது. இங்குள்ள தாமரை இலை தண்டு அருகம்புல் அமுக்ராணாக்கிய கிழங்கு ஆகியவற்றில் ஆய்வு செய்து, தாமிரபரணி நதிக்கரையில் உள்ள இச்செடிகளில் தாமிரசத்து அதிகமாக உள்ளது என ஊர்ஜிதப்படுத்தி உள்ளனர்.