» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
சுற்றுலா பேருந்து மீது 2 லாரிகள் மோதி கோர விபத்து - 6 பேர் பலி!
சனி 10, பிப்ரவரி 2024 10:29:00 AM (IST)
நெல்லூர் அருகே 2 லாரிகள், சுற்றுலா பேருந்து மீது நேருக்கு நேர் மோதிய கோர விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
ஆந்திரம் மாநிலம், நெல்லூர் மாவட்டம் முசுனூர் சுங்கச்சாவடி அருகே இன்று சனிக்கிழமை அதிகாலை 2 மணியளவில் ஸ்ரீகாளஹஸ்தி நோக்கி எருதுகளை ஏற்றிக்கொண்டு ஒரு லாரியும், பின்னால் இரும்பு ஏற்றிச் சென்ற மற்றுமொரு லாரியும் சென்று கொண்டிருந்தது.
இந்த நிலையில், இரும்பு ஏற்றிச் சென்ற லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, எதிர்திசையில் வந்த தனியார் சுற்றுலாப் பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் சுற்றுலாப் பேருந்தில் பயணம் செய்தவர்களில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர், மேலும் 2 பேர் நெல்லூர் அரசு மருத்துவமனையில் இறந்தனர். மற்றும் 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
விபத்துக்குள்ளான சுற்றுலாப் பேருந்து சென்னை வடபழனியில் இருந்து நேற்று நள்ளிரவில் ஹைதராபாத் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில், நெல்லூர் அருகே சென்ற பஸ் இன்று அதிகாலை லாரியுடன் மோதி விபத்தில் சிக்கியுள்ளது. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தெலுங்கானாவில் ரசாயன தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து: 10 பேர் உயிரிழப்பு!
திங்கள் 30, ஜூன் 2025 4:46:07 PM (IST)

கொல்கத்தாவில் மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம் வழக்கு: சட்டக்கல்லூரி காவலாளி கைது
ஞாயிறு 29, ஜூன் 2025 12:37:13 PM (IST)

வங்கதேச தலைநகர் டாக்காவில் இந்து கோவில் இடிப்பு: இந்தியா கடும் கண்டனம்
வெள்ளி 27, ஜூன் 2025 11:01:13 AM (IST)

மொழி அடிப்படையில் மக்களை பிரிக்க பாஜக முயற்சிக்கிறது : உத்தவ் தாக்கரே குற்றச்சாட்டு!
வியாழன் 26, ஜூன் 2025 5:21:14 PM (IST)

பாராசிட்டமால் 650 உள்பட 14 வகை மாத்திரை, மருந்துகளுக்கு கர்நாடக அரசு தடை!
வியாழன் 26, ஜூன் 2025 3:32:39 PM (IST)

சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு செல்லும் முதல் இந்தியர் : பிரதமர் மோடி வாழ்த்து
புதன் 25, ஜூன் 2025 5:17:32 PM (IST)
