» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அலுவலகத்தில் இயக்குநர் அமீர் ஆஜர்!!
செவ்வாய் 2, ஏப்ரல் 2024 11:31:47 AM (IST)
புது டெல்லியில் உள்ள போதைப் பொருள் தடுப்புப் பிரிவு தலைமை அலுவலகத்தில் திரைப்பட இயக்குநர் அமீர் இன்று(ஏப். 2) ஆஜரானார்.
தி.மு.க., முன்னாள் நிர்வாகியும், சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பல் தலைவனுமான ஜாபர் சாதிக் (35), மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இவரை, 10 நாள் காவலில் எடுத்து விசாரித்தனர். அதன் தொடர்ச்சியாக, திரைப்பட இயக்குனர் அமீர் மற்றும் தொழில் அதிபர்கள் அப்துல் பாசித் புகாரி, சையது இப்ராஹிம் ஆகியோருக்கு, இன்று டெல்லியில் விசாரணைக்கு ஆஜராகுமாறு, 'சம்மன்' அனுப்பினர்.இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையாகத் திரைப்பட இயக்குநரும் நடிகருமான அமீர், புது டெல்லியில் உள்ள போதைப் பொருள் தடுப்புப் பிரிவு தலைமை அலுவலகத்தில் விசாரணைக்காக இன்று(ஏப். 2) ஆஜரானார். முன்னதாக அவர் கூறும்போது, "விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பேன். என் தரப்பு நியாயங்களையும் உண்மைகளையும், அதிகாரிகளிடம், 100 சதவீதம் எடுத்து வைத்து வெற்றியுடன் திரும்பி வருவேன்' என்றார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஐ-பேக் அலுவலகத்தில் அமலாக்கத் துறை சோதனை: மம்தா பானர்ஜி கடும் கண்டனம்
வியாழன் 8, ஜனவரி 2026 4:38:10 PM (IST)

பனிச்சறுக்கு விபத்து: வேதாந்தா குழுமத்தின் தலைவர் அனில் அகர்வால் மகன் மரணம்!
வியாழன் 8, ஜனவரி 2026 10:19:38 AM (IST)

பயங்கரவாதத்திற்கு எதிராக போராட உறுதி : இஸ்ரேல் பிரதமருடன் மோடி பேச்சு!
புதன் 7, ஜனவரி 2026 5:21:12 PM (IST)

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா மருத்துவமனையில் அனுமதி
செவ்வாய் 6, ஜனவரி 2026 4:56:38 PM (IST)

சாகர் தீவை இணைக்க ரூ.1,670 கோடி செலவில் பாலம்: மம்தா பானர்ஜி அடிக்கல் நாட்டினார்
செவ்வாய் 6, ஜனவரி 2026 11:51:15 AM (IST)

சட்டவிரோத தகவல், படங்கள் பதிவிட்டால் தடை: பயனர்களுக்கு எக்ஸ் தளம் எச்சரிக்கை
திங்கள் 5, ஜனவரி 2026 12:11:59 PM (IST)

