» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
பாஜகவில் இணையாவிட்டால் கைது: அமலாக்கத் துறை மிரட்டியதாக ஆம்ஆத்மி அமைச்சர் புகார்!
செவ்வாய் 2, ஏப்ரல் 2024 11:55:21 AM (IST)
பாஜகவில் இணையாவிட்டால் ஒரு மாதத்தில் கைது செய்யப்படுவீர் என அமலாக்கத்துறையினர் மிரட்டியதாக ஆம்ஆத்மி அமைச்சர் அதிஷி குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: என்னை பா.ஜ.,வில் இணையும் படி தூது அனுப்பினர். பா.ஜ.,வின் மிரட்டலுக்கு ஒரு போதும் அஞ்ச மாட்டோம். தேர்தல் நேரத்தில் சவுரப் பரத்வாஜ், துர்கேஷ் பதக் மற்றும் ராகவ் சதா உள்ளிட்ட 4 அமைச்சர்களை கைது செய்து சிறையில் அடைக்க அமலாக்கத்துறை திட்டமிட்டுள்ளது. பாஜகவில் இணையாவிட்டால் ஒரு மாதத்தில் கைது செய்யப்படுவீர் என அமலாக்கத்துறையினர் மிரட்டியுள்ளனர். அரவிந்த் கெஜ்ரிவால் குற்றவாளி இல்லை. அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா செய்ய எந்த காரணமும் இல்லை. இன்று அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா செய்தால், எதிர்க்கட்சி அரசுகளை கவிழ்க்க பா.ஜ.,வுக்கு மிகவும் எளிமையாக இருக்கும்.
இப்போது அரவிந்த் கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா, சஞ்சய் சிங், சத்யேந்திர ஜெயின் ஆகியோர் சிறையில் உள்ளனர். ஆம் ஆத்மி கட்சி இன்னும் ஒற்றுமையாகவும் வலுவாகவும் உள்ளது. இப்போது ஆம் ஆத்மி கட்சியின் அடுத்த தலைவர்களை சிறையில் அடைக்க திட்டமிட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.-
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பெண் கமாண்டோ படுகொலை : வரதட்சணை விவகாரத்தில் கணவர் வெறிச்செயல்!
வெள்ளி 30, ஜனவரி 2026 4:56:57 PM (IST)

யுஜிசியின் புதிய விதிகளுக்கு உச்ச நீதிமன்றம் தடை: மத்திய அரசு பதில் அளிக்க உத்தரவு
வெள்ளி 30, ஜனவரி 2026 10:30:01 AM (IST)

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மேலும் 10 நாள்கள் அவகாசம்: உச்சநீதிமன்றம் உத்தரவு!
வியாழன் 29, ஜனவரி 2026 5:23:49 PM (IST)

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது உச்சநீதிமன்றம் அதிருப்தி!
வியாழன் 29, ஜனவரி 2026 12:46:13 PM (IST)

காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் விஷ ஊசி செலுத்தி பெற்றோரை கொன்ற நர்ஸ் கைது!
வியாழன் 29, ஜனவரி 2026 8:24:37 AM (IST)

அஜித் பவார் விமான விபத்து குறித்து உரிய விசாரணை : மம்தா பானர்ஜி வலியுறுத்தல்!
புதன் 28, ஜனவரி 2026 4:08:44 PM (IST)

