» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

தொடா்ந்து 7-ஆவது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்து நிர்மலா சீதாராமன் சாதனை!

செவ்வாய் 23, ஜூலை 2024 11:16:10 AM (IST)



மக்களவையில் 2024-25ஆம் நிதியாண்டுக்கான முழு பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றுள்ள சிறப்பம்சங்கள் குறித்து உரையாற்றி வருகிறார்.

பிரதமர் நரேந்திர மோடியின் மூன்றாவது ஆட்சியில் தாக்கல் செய்யப்பட்ட முதல் பட்ஜெட் இதுவாகும். மத்திய நிதியமைச்சர் நிா்மலா சீதாராமன் தொடா்ந்து 7-ஆவது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்து சாதனை படைத்துள்ளார். இதன்மூலம் தொடா்ச்சியாக 5 முறை முழு பட்ஜெட்டும், ஒருமுறை இடைக்கால பட்ஜெட்டும் தாக்கல் செய்த மறைந்த முன்னாள் பிரதமா் மொராா்ஜி தேசாயின் சாதனையை நிா்மலா முறியடித்துள்ளார். மொராா்ஜி தேசாய் அதிகபட்சமாக 10 முறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காலை குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற நிர்மலா சீதாராமன், மத்திய அமைச்சரவையில் பட்ஜெட்டை தாக்கல் செய்து ஒப்புதல் பெற்றார். மகாராஷ்டிரம், ஹரியாணா உள்ளிட்ட மாநிலங்களில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற இருப்பதால் இது தோ்தலைக் கருத்தில்கொண்ட பட்ஜெட்டாகவும் அமைய வாய்ப்புள்ளது. முன்னேப்போதும் இல்லாத அளவுக்கு மூலதனச் செலவுக்கு இந்த பட்ஜெட்டில் அதிக நிதி ஒதுக்கப்படும் என்று தெரிகிறது.  


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory