» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

கடும் பனி மூட்டத்தால் அடுத்தடுத்து வாகனங்கள் மோதி விபத்து : 4 பேர் பலி

செவ்வாய் 16, டிசம்பர் 2025 11:14:45 AM (IST)



டெல்லியில் கடும் பனிமூட்டம் காரணமாக வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானதில் 4 உயிரிழந்தனர். மேலும், 25 பேர் படுகாயமடைந்தனர். 

டெல்லி, மராட்டியம், அரியானா, உத்தரபிரதேசம் உள்பட பல்வேறு வடமாநிலங்களில் பனிமூட்டம் அதிகமாக காணப்படுகிறது. குறிப்பாக, காலை நேரங்களிலும், மாலை நேரங்களில் பனிமூட்டம் அதிகமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் அவதியடைந்துள்ளனர். பனிமூட்டத்தால் விபத்துகளும் ஏற்பட்டு வருகின்றன.

இந்நிலையில், தலைநகர் டெல்லி உத்தரபிரதேசத்தின் ஆக்ரா இடையேயான எக்ஸ்பிரஸ் சாலையில் இன்று பயங்கர விபத்து ஏற்பட்டது. கடும் பனிமூட்டம் காரணமாக போதிய வெளிச்சமின்மையால் சாலையில் வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது. உத்தரபிரதேசத்தின் மதுரா அருகே இந்த விபத்து ஏற்பட்டது. 2க்கும் மேற்பட்ட பஸ்கள், கார்கள், வேன்கள் என அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் வாகனங்கள் தீப்பற்றி எரிந்தன. இந்த விபத்தில் 4 உயிரிழந்தனர். மேலும், 25 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory