» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
திரிணமூல் தலைவர் பதவியிலிருந்து மமதா நீக்கம்: மேற்கு வங்க அரசியலில் பரபரப்பு!
செவ்வாய் 23, ஜூன் 2026 12:05:48 PM (IST)
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து, திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து மமதா பானர்ஜி நீக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் அதிருப்தி குழுவினர் அறிவித்துள்ளனர்.
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்து ஆட்சியைப் பறிகொடுத்ததைத் தொடர்ந்து, கட்சிக்குள் பிளவுகளும் பூசல்களும் உச்சமடைந்துள்ளன. தற்போது 58 அதிருப்தி எம்எல்ஏக்களும், 20 அதிருப்தி எம்பிக்களும் தனி அணியாகப் பிரிந்து செயல்பட்டு வருகின்றனர்.
கொல்கத்தாவில் நேற்று மாலை அதிருப்தி எம்எல்ஏக்கள் நடத்திய சிறப்புக் கட்சிக் கூட்டத்தில், மமதா பானர்ஜியை கட்சியின் தலைவர் பதவியிலிருந்து நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ரிதபிரத பானர்ஜி, கட்சியின் அரசியலமைப்பு 20-வது பிரிவின்படி மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை தேசிய செயற்குழு மாற்றியமைக்கப்பட வேண்டும் என்றும், கடந்த பிப்ரவரியுடன் பழைய செயற்குழுவின் பதவிக்காலம் முடிவடைந்துவிட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், மமதா பானர்ஜி இனி கட்சியின் ஆலோசகராகச் செயல்படுவார் என்றும் அவர் கூறினார்.
புதிய செயற்குழு தேர்வு:
இந்தச் சிறப்புக் கூட்டத்தில் புதிய தேசிய செயற்குழு தேர்வு செய்யப்பட்டது. அப்போது கட்சியின் புதிய தலைவராக மூத்த எம்எல்ஏ அரூப் ராய் ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார். இந்த நடவடிக்கை குறித்து மமதா பானர்ஜி தரப்பு மூத்த தலைவர் குணால் கோஷ் கூறுகையில், இதுபோன்ற கூட்டத்தைக் கூட்டுவதற்கோ அல்லது கட்சியின் அமைப்பு ரீதியிலான கட்டமைப்பை மாற்றுவதற்கோ அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு எந்தவித அதிகாரமும் இல்லை எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
முன்னதாக, அதிருப்தி எம்எல்ஏக்கள் அளித்த புகாரின் அடிப்படையில், திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்குச் சொந்தமான 440 கோடி ரூபாய் இருப்பு உள்ள 3 வங்கிக் கணக்குகளை மேற்கு வங்க காவல்துறை முடக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

டீப்ஃபேக் மற்றும் போலி தகவல்களை நீக்க காலக்கெடு குறைப்பு : மத்திய அரசு அதிரடி!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 5:05:16 PM (IST)

நெசவாளர்களை ஆதரிக்கக் கைத்தறிப் பொருட்களை வாங்குங்கள்: பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள்!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 4:44:44 PM (IST)

கேஸ் சிலிண்டர் விலை ரூ.18 உயர்கிறது? - மத்திய அரசு ஆலோசனை!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 11:44:50 AM (IST)

நீதிபதிகளின் ஓய்வு வயது 60-லிருந்து 62-ஆக உயர்வு? உச்ச நீதிமன்றத்தில் வெளியான முக்கிய உத்தரவு!
வியாழன் 6, ஆகஸ்ட் 2026 4:36:28 PM (IST)

வங்கிகளுக்கான வட்டி விகிதத்தில் மாற்றமில்லை: ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்கோத்ரா அறிவிப்பு!
வியாழன் 6, ஆகஸ்ட் 2026 8:38:12 AM (IST)

எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தால் ஏற்கப்படும்: கா்நாடக முதல்வா் டி.கே. சிவகுமார்
புதன் 5, ஆகஸ்ட் 2026 10:17:16 AM (IST)


