» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
நீதிபதிகளின் ஓய்வு வயது 60-லிருந்து 62-ஆக உயர்வு? உச்ச நீதிமன்றத்தில் வெளியான முக்கிய உத்தரவு!
வியாழன் 6, ஆகஸ்ட் 2026 4:36:28 PM (IST)
நீதித்துறை அதிகாரிகளின் ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62-ஆக உயர்த்துவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும், தங்கள் நிலைப்பாட்டை செப்டம்பர் 2-ஆம் தேதிக்குள் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.
அகில இந்திய நீதிபதிகள் சங்கம் (AIJA) தாக்கல் செய்த மனு, இந்தியத் தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதிகள் ஜாய் மால்யா பாக்சி மற்றும் வி. மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் முக்கியக் கருத்துகள்: 1992-ஆம் ஆண்டில் சுமார் 10,000-ஆக இருந்த விசாரணை நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை, தற்போது 20,000-க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. அதேபோல, உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 568-லிருந்து 1,114-ஆக அதிகரித்துள்ளது.
நீதித்துறை உத்தரவு பிறப்பித்து நடைமுறைப்படுத்துவதை விட, மாநில அரசுகளே சுயமாக நிர்வாக ரீதியாக முடிவெடுத்து இந்த ஓய்வு வயது உயர்வை நடைமுறைப்படுத்துவது சிறப்பாக இருக்கும் என அமர்வு குறிப்பிட்டது.
விசாரணையின் போது மாநில அரசுகள் தரப்பில் வாதிடுகையில், "நீதிபதிகளின் ஓய்வு வயதை 62-ஆக உயர்த்தினால், பிற அரசு ஊழியர்களிடையே அதிருப்தியும் ஏற்றத்தாழ்வும் ஏற்படும். அவர்களும் இதேபோல வயது உயர் கோருவார்கள். இது அரசுக்குக் கூடுதல் நிதிச் சுமையை உண்டாக்கும்" எனத் தெரிவிக்கப்பட்டது.
மாநிலங்களின் இந்த இரண்டு ஆட்சேபனைகளையும் நிராகரித்த உச்ச நீதிமன்ற அமர்வு கூறியதாவது: ஒரு நீதித்துறை அதிகாரி ஓய்வு பெறும்போது, அரசு அவருக்கு ஓய்வூதியப் பலன்களையும், அவர் கடைசியாகப் பெற்ற சம்பளத்தில் பாதியையும் வழங்குகிறது. அதே நேரத்தில் காலியாகும் இடத்தை நிரப்பப் புதிய நபருக்கு மீண்டும் முழுச் சம்பளம் வழங்க வேண்டி வருகிறது.
அதற்குப் பதிலாக, அனுபவமும் திறமையும் வாய்ந்த நீதித்துறை அதிகாரிகளை மேலும் சில ஆண்டுகள் பணியில் தக்கவைத்துக்கொள்வது மாநில அரசுக்கும் நீதித்துறைக்கும் நிதி ரீதியாகப் பெரும் பயனையே அளிக்கும்."
உயர் நீதிமன்றங்களுக்கு உத்தரவு: அரசு ஊழியர்களின் தற்போதைய ஓய்வு பெறும் வயதைப் பொருட்படுத்தாமல், நீதித்துறை அதிகாரிகளின் ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62-ஆக உயர்த்துவது குறித்து மாநிலங்கள் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும், மாநில அரசுகளின் முடிவுக்கு உயர் நீதிமன்றங்கள் வலு சேர்க்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மாணவர்கள் முற்றுகைப் போராட்டம்: தடியடி, கண்ணீர் புகைக் குண்டுவீச்சு; போர்க்களமான சட்டமன்ற வளாகம்!
செவ்வாய் 11, ஆகஸ்ட் 2026 8:36:38 AM (IST)

காவிரி நீரை உடனடியாகத் திறக்கக் கோரி தமிழக அரசு மனு: ஆகஸ்ட் 13-ல் உச்ச நீதிமன்றம் விசாரணை!
திங்கள் 10, ஆகஸ்ட் 2026 4:16:13 PM (IST)

டேட்டிங் செயலிகள் மூலம் தொழிலதிபர்களை மிரட்டி ரூ.6 கோடி பறித்த பெண்: அதிர்ச்சித் தகவல்கள்!
திங்கள் 10, ஆகஸ்ட் 2026 11:05:15 AM (IST)

இமாசலப் பிரதேசத்தில் மலைப்பாதையில் பஸ் கவிழ்ந்து 7 பேர் பலி; 11 பயணிகள் காயம்
ஞாயிறு 9, ஆகஸ்ட் 2026 9:35:28 AM (IST)

யூபிஐ, ரூபே கார்டு பரிவர்த்தனைக் கட்டணம்: : மக்களவையில் மசோதா நிறைவேற்றம்!
சனி 8, ஆகஸ்ட் 2026 5:36:51 PM (IST)

நீட் வினாத்தாளை பேராசிரியர்களே விற்றனர்: சிபிஐ குற்றப்பத்திரிகையில் அதிர்ச்சித் தகவல்!
சனி 8, ஆகஸ்ட் 2026 12:10:37 PM (IST)


