» செய்திகள் - விளையாட்டு » உலகம்

அமெரிக்காவில் பல மாகாணங்களை பந்தாடிய பனிப்புயல்: இயல்புவாழ்க்கை பாதிப்பு

செவ்வாய் 1, ஏப்ரல் 2025 8:11:12 AM (IST)

அமெரிக்காவின் பல மாகாணங்களை புயல் பந்தாடியது. இதனால் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் 4 லட்சம் பேர் இருளில் மூழ்கினர்.

காலநிலை மாற்றம் என்பது தற்போதைய உலகம் சந்திக்கும் மிகப்பெரும் பிரச்சினை ஆகும். இதன் காரணமாக புவி வெப்பமயமாதல், நிலநடுக்கம், சுனாமி உள்ளிட்ட பல்வேறு இயற்கை பேரிடர்கள் ஏற்படுகின்றன. இதனால் ஏற்படும் பாதிப்புக்கு வளர்ந்த நாடுகள் மட்டும் விதிவிலக்கல்ல. அதன்படி அமெரிக்காவில் புயல் காற்றுடன் கூடிய கனமழை பெய்யும் என அந்த நாட்டின் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

அதன்படி அங்குள்ள இஸ்கான்சின், மிச்சிகன், இண்டியான ஆகிய மாகாணங்களை கடுமையான பனிப்புயல் தாக்கியது. இதனை தொடர்ந்து பெய்த கனமழையால் பல நகரங்கள் வெள்ளக்காடாக மாறின. அப்போது பல இடங்களில் மரங்கள் முறிந்து நெடுஞ்சாலையில் விழுந்தன. அதனை அப்புறப்படுத்தும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். எனவே முக்கிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

அதேபோல் அங்குள்ள பல வீடுகள் மற்றும் ஆயிரக்கணக்கான மின்கம்பங்கள் சேதம் அடைந்தன. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் 4 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இருளில் மூழ்கினர். எனவே மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக முடங்கியது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory