» செய்திகள் - விளையாட்டு » உலகம்
மலேசியாவில் எரிவாயு குழாய் வெடித்து சிதறி தீ விபத்து : 100-க்கும் மேற்பட்டோர் படுகாயம்!
புதன் 2, ஏப்ரல் 2025 8:30:26 AM (IST)

மலேசியாவில் எரிவாயு குழாய் வெடித்து சிதறி பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 100-க்கும் மேற்பட்டோர் உடல் கருகி படுகாயம் அடைந்தனர்..
மலேசியா தலைநகர் கோலாலம்பூர் புத்ரா ஹைட்ஸ் பகுதியில் எரிவாயு நிலையம் அமைந்துள்ளது. அங்கு தேசிய எண்ணெய் நிறுவனமான பெட்ரோனாசின் எரிவாயு குழாய் மூலம் எரிவாயு கொண்டு செல்லப்படுகிறது. இந்நிலையில் அங்குள்ள எரிவாயு குழாய் திடீரென தீப்பிடித்தது. பின்னர் பயங்கர சத்தத்துடன் அந்த குழாய் வெடித்து சிதறியது.
அப்போது சுமார் 300 அடி உயரத்துக்கு தீக்குழம்பு மேலெழும்பியது. இது பார்ப்பதற்கு எரிமலை வெடித்து சிதறியது போல இருந்தது. தொடர்ந்து பரவிய தீயால் அங்கு சுமார் 50 வீடுகள் எரிந்து நாசமாகின. எனவே அங்கு வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டனர். அதேபோல் முன்னெச்சரிக்கையாக அங்குள்ள 3 எரிவாயு நிலையங்களும் மூடப்பட்டன.
இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சியடித்தனர். இந்த பணியில் ஏராளமான ஹெலிகாப்டர்களும் ஈடுபடுத்தப்பட்டன. இதனால் பல மணி நேர போராட்டத்துக்கு பிறகு தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
அதேசமயம் இந்த விபத்தில் 100-க்கும் மேற்பட்டோர் உடல் கருகி படுகாயம் அடைந்தனர். மீட்பு படையினர் அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தேசிய எண்ணெய் நிறுவன அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

லடாக்கில் டிரம்ப், நெதன்யாகுவுக்கு எதிராக போராட்டம் : சவப்பெட்டியுடன் திரண்ட மக்கள்!
புதன் 14, ஜனவரி 2026 4:51:14 PM (IST)

மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ்
திங்கள் 12, ஜனவரி 2026 8:43:22 PM (IST)

இந்தியா-பாகிஸ்தான் போரை நிறுத்தி, பல கோடி உயிர்களை காப்பாற்றினேன்: டிரம்ப் பேச்சு!
சனி 10, ஜனவரி 2026 12:45:36 PM (IST)

இந்தியா - ஐரோப்பா இணைந்தால் சர்வதேச அரசியலில் மாற்றம் ஏற்படும்: ஜெய்சங்கர் உறுதி
வெள்ளி 9, ஜனவரி 2026 5:15:18 PM (IST)

இந்தியர்களுக்கான விசா மற்றும் தூதரக சேவை நிறுத்தம்: வங்காளதேசம் அறிவிப்பு!
வியாழன் 8, ஜனவரி 2026 9:01:04 PM (IST)

இந்தியாவுக்கு 500 சதவீதம் வரி விதிக்கும் மசோதாவுக்கு டிரம்ப் ஒப்புதல்!
வியாழன் 8, ஜனவரி 2026 12:10:11 PM (IST)

