» செய்திகள் - விளையாட்டு » உலகம்

காசாவில் பள்ளிக்கூடம் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல்: குழந்தைகள் உட்பட 27 பேர் உயிரிழப்பு

வெள்ளி 4, ஏப்ரல் 2025 5:45:48 PM (IST)

காசாவில் உள்ள பள்ளிக்கூடம் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியதில் 27 பேர் உயிரிழந்துள்ளனர். 

காசாவுக்கு எதிரான முதல்கட்ட போர்நிறுத்த ஒப்பந்தம் முடிவுக்கு வந்ததை தொடர்ந்து, காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது. கடந்த 18ம் தேதி காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 400-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

இந்த நிலையில், காசாவில் உள்ள பள்ளிக்கூடத்தின் மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் 27 பேர் கொல்லப்பட்டதாக காசா சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில் 14 பேர் குழந்தைகள் என்றும், 5 பேர் பெண்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த தாக்குதலில் மேலும் 70 பேர் படுகாயமடைந்துள்ள நிலையில், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுவதாக காசா சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தவிர காசாவின் பிற பகுதிகளில் நேற்று இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதல்களில் சுமார் 100 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory