» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
துப்பாக்கியால் சுட்டு சப்-இன்ஸ்பெக்டர் தற்கொலை : குற்றாலத்தில் பரபரப்பு
சனி 13, ஆகஸ்ட் 2022 10:14:42 AM (IST)
குற்றாலத்தில் தனியார் விடுதியில் தங்கியிருந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாநகர ஆயுதப்படையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் பார்த்திபன் (54). இவர் சென்னை உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி ஒருவருக்கான பாதுகாப்பு பிரிவில் இருந்தார். இந்நிலையில் குற்றாலத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக முன்னாள் நீதிபதி நேற்று வந்திருந்தார். அப்போது அவருடன் பார்த்திபனும் வந்திருந்தார். இருவரும் குற்றாலத்தில் இருந்து பழைய குற்றாலம் செல்லும் சாலையில் உள்ள ஒரு தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கி இருந்தனர்.
நள்ளிரவு நேரத்தில் பார்த்திபன் தங்கி இருந்த அறையில் இருந்து துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டது. உடனே விடுதியில் இருந்த ஊழியர்கள் அங்கு ஓடி சென்றனர். அப்போது பார்த்திபன் தங்கி இருந்த அறையில் உள்பக்கம் தாழ்ப்பாள் போடப்பட்டிருந்தது. இதனால் விடுதி ஊழியர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது துப்பாக்கியால் சுட்டுக்கொண்டபடி பார்த்திபன் ரத்த வெள்ளத்தில் சரிந்து கிடந்தார். இறந்து கிடந்த அவரது கையில் துப்பாக்கியும் இருந்தது.
இதனால் அவர் தற்கொலை செய்துகொண்டதை அறிந்த விடுதி ஊழியர்கள் குற்றாலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் தாமஸ் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்று பார்த்திபன் உடலை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அவர் குடும்ப பிரச்சினையால் தற்கொலை செய்தாரா? பணிச்சுமை காரணமா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் பனை விதைகளை நடவு செய்யும் பணி துவக்கம்!
புதன் 15, அக்டோபர் 2025 4:52:08 PM (IST)

காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் மேலும் இருவர் கைது
புதன் 15, அக்டோபர் 2025 12:53:23 PM (IST)

பாளை. மத்திய சிறையில் கைதி தூக்குப்போட்டு தற்கொலை: போக்சோ வழக்கில் கைதானவர்
புதன் 15, அக்டோபர் 2025 8:46:52 AM (IST)

பெண்ணிடம் நகை பறித்தவருக்கு 3 ஆண்டு சிறை : திருநெல்வேலி நீதிமன்றம் தீர்ப்பு!!
செவ்வாய் 14, அக்டோபர் 2025 11:15:52 AM (IST)

திருநெல்வேலியில் 1 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 பேர் கைது!
செவ்வாய் 14, அக்டோபர் 2025 10:55:36 AM (IST)

சிப்காட் வளாகத்தில் குழந்தைகள் காப்பகம்: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்!
திங்கள் 13, அக்டோபர் 2025 5:06:50 PM (IST)
