» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தென்காசியில் நிரல் திருவிழா பயிற்சி பட்டறை : ஆட்சியர் துவக்கி வைத்தார்!

புதன் 8, நவம்பர் 2023 5:13:54 PM (IST)



தென்காசியில் "நிரல் திருவிழா” பயிற்சி பட்டறையை  மாவட்ட ஆட்சித்தலைவர் துரை.இரவிச்சந்திரன் துவக்கி வைத்தார்.

தமிழ்நாடு அரசு நான் முதல்வன் திட்டத்தின் கீழ், தென்காசி மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மற்றும் தொழில் முனைவோர் மற்றும் புத்தாக்க இயக்கம் இணைந்து ஒரு நாள் "நிரல் திருவிழா” பயிற்சி பட்டறையானது தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் துவக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியினை தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் துரை.இரவிச்சந்திரன்; துவக்கி வைத்து உரையாற்றினார். 

அவரது உரையில் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களில் உள்ள பிரச்சனைகளை கண்டறிந்து, பொறியியல் கல்லூரி மாணவர்கள் அதற்கான தீர்வினை மென்பொருள்  மூலம்  கண்டுபிடிக்கும் பொருட்டு, அறிக்கையாக தயாரித்து நான் முதல்வன் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டியதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.

இந்நிகழ்வில் EDII-TN  முதன்மை பயிற்றுவிப்பாளர் முனைவர் மு.திலிபன் குமார் தொழில் நிறுவனங்கள் மற்றும் அரசுத்துறை சார்ந்த பிரச்சனைகளை கண்டறியும் முறை மற்றும் வளர்ந்து வரும் தொழிற் நுட்பத்துக்கு ஏற்ப புதிய வடிவமைப்பு  சிந்தனையோடு அணுகுவதற்கான முறையை பயிற்றுவித்தார். EDII-TN   கள ஒருங்கிணைப்பாளர் முனைவர் சுவைதரன், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக மாநில பிரதிநிதி ஜாவித்,  மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் மாரியம்மாள் மற்றும் மாவட்ட திறன் பயிற்சி அலுவலக உதவி இயக்குநர் த.ஜார்ஜ் பிராங்கிளின் ஆகியோர் கலந்து கொண்டனர். 

மேலும் மாவட்டத்திலுள்ள  அரசுத்துறை அலுவலர்கள் மற்றும்; தொழில்;நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு, தங்கள் துறை சார்ந்த பிரச்சனைகளை களைவதற்கான தீர்வு காணும் பொருட்டு, நான் முதல்வன் இணையத்தளத்தில் அவர்களது அறிக்கையினை பதிவேற்றினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory