» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
சுற்றுலாதலங்களில் மதி அங்காடி நடத்துவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு: ஆட்சியர் தகவல்
வியாழன் 8, மே 2025 11:21:00 AM (IST)
சுற்றுலாதலங்களில் ‘மதி அங்காடி” நடத்துவதற்கு குழு/கூட்டமைப்புகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார் தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் செயல்படும் மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனை சங்கத்தின் மூலம் முக்கிய சுற்றுலா தலங்களில் மகளிர் சுய உதவிக்குழுக்களின் உற்பத்திப்பொருட்களை நேரடியாக விற்பனை செய்ய "மதி அங்காடி” அமைக்க திட்டமிடப்பட்டு, திருநெல்வேலி மாவட்டம், இராதாபுரம் வட்டாரம், உவரி அந்தோணியார் சர்ச் அருகில் மதி அங்காடி அமைக்கப்பட்டு பணி முடிவடையும் நிலையில் உள்ளது.
இதன் மூலம் மகளிர் சுய உதவிக் குழுக்களின் உற்பத்தி பொருட்களுக்கு சந்தை வாய்ப்பு கிடைப்பதுடன் சுற்றுலா பயணிகளுக்கும் அங்குள்ள பொருட்கள் தரமாக குறைந்த விலையில் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
எனவே, மதி அங்காடி செயல்படுத்திட இராதாபுரம் வட்டாரம், உவரி கிராம ஊராட்சி பகுதியிலுள்ள ஆர்வமும், தகுதி உடைய மகளிர் சுய உதவிக்குழுக்கள் / ஊராட்சி அளவிலான குழு கூட்டமைப்புகள் மற்றும் மாற்றுத்திறனாளி நலிவுற்றோர் குழுக்கள் ஆகியோர் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் உறுப்பினர்கள் மகளிர் சுய உதவிக்குழுவில் சேர்ந்து ஓராண்டு பூர்த்தி செய்திருக்க வேண்டும். மேலும், தேசிய ஊரக / நகர்புற வாழ்வாதார இணையதளத்தில் (NRLM/NULM Portal)–லில் பதிவு பெற்றிருத்தல் வேண்டும். மேலும் சுய உதவிக்குழு உற்பத்தி / விற்பனையில் ஆர்வம் மற்றும் முன் அனுபவம் உள்ளவர்களாக இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளி மற்றும் நலிவுற்றோர் குழுக்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
எனவே ஆர்வமுள்ள குழுக்கள்/கூட்டமைப்புகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த விண்ணப்பங்களை 12.05.2025-க்குள் திட்ட இயக்குநர், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை கட்டிடம், திருநெல்வேலி என்ற முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் இரா.சுகுமார், தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

எஸ்ஐஆர் பணிகளுக்காக டிச.13, 14ல் சிறப்பு முகாம் : ஆட்சியர் இரா.சுகுமார் தகவல்
வெள்ளி 12, டிசம்பர் 2025 4:42:37 PM (IST)

தென்காசி வக்கீல் கொலையில் தேடப்பட்ட முக்கிய குற்றவாளி ரயில் முன் பாய்ந்து தற்கொலை!!
வெள்ளி 12, டிசம்பர் 2025 8:20:02 AM (IST)

கைவினைக் கலைஞர்கள் ரூ.10 லட்சம் வரை கடன் பெறலாம்: ஆட்சியர் அழைப்பு!
வியாழன் 11, டிசம்பர் 2025 10:35:09 AM (IST)

மகனுக்கு விஷம் கொடுத்துவிட்டு இளம்பெண் தற்கொலை: போலீசார் விசாரணை
வியாழன் 11, டிசம்பர் 2025 8:27:54 AM (IST)

நெல்லையப்பர் கோவிலில் நடிகர் தனுஷ் சுவாமி தரிசனம்!
புதன் 10, டிசம்பர் 2025 4:45:40 PM (IST)

அரசு ஊழியர் வீட்டில் 20 பவுன் நகை கொள்ளை: கதவை உடைத்து மர்ம நபர்கள் கைவரிசை!
புதன் 10, டிசம்பர் 2025 8:42:41 AM (IST)


