» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நெல்லை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை: ரூ.95 ஆயிரம் பறிமுதல்!

புதன் 8, நவம்பர் 2023 9:23:58 PM (IST)

நெல்லை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள ஊரக வளர்ச்சி முகமை உதவி பொறியாளர் அலுவலகத்தில் நடந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் கணக்கில் வராத ரூ.95 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைநெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு உதவி பொறியாளராக நாகர்கோவிலை சேர்ந்த கவுதமன் (55) என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் ஒப்பந்ததாரர்களிடம் அதிக பணம் கேட்பதாக மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

இந்த நிலையில் நேற்று மாலையில் கவுதமன் தனது அலுவலகத்தில் பணியில் இருந்தார். அப்போது லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மெக்லரின் எஸ்கால் தலைமையில் இன்ஸ்பெக்டர் ராபின் ஞானசிங், சப்-இன்ஸ்பெக்டர்கள் மாரியப்பன், சீதாராமன் மற்றும் போலீசார் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில் உதவி பொறியாளர் கவுதமன், தச்சநல்லூரை சேர்ந்த இளநிலை வரைவு அலுவலர் பாலசுப்பிரமணியன் (54), வள்ளியூரை சேர்ந்த கார் டிரைவர் இசக்கி (56) ஆகியோரிடம் கணக்கில் வராத ரூ.95 ஆயிரத்து 800 பறிமுதல் செய்யப்பட்டது. 

மேலும் அங்கிருந்து இனிப்பு பாக்ஸ்கள், பட்டாசு பாக்ஸ்கள் மற்றும் சில ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுகுறித்து உதவி பொறியாளர் கவுதமன், இளநிலை வரைவு அலுவலர் பாலசுப்பிரமணியன், கார் டிரைவர் இசக்கி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள உள்ளனர். இந்த சோதனை இரவு வரை நீடித்தது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory