» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
மதுரை ரயில்வே கோட்டத்தில் தீபாவளி விடுமுறைக்காக சிறப்பு ரயில்கள்
ஞாயிறு 12, நவம்பர் 2023 2:52:55 PM (IST)
மதுரை ரயில்வே கோட்டத்தில் தீபாவளி விடுமுறைக்காக சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
மதுரை கோட்ட ரயில்வே சார்பில் தீபாவளி பண்டிகை கால கூட்ட நெரிசலை சமாளிக்க சிறப்புக்கட்டண மற்றும் பண்டிகை கால கட்டண சிறப்பு ரயில்களை இயக்குகிறது. அதன்படி, நாகர்கோவில்-தாம்பரம் சிறப்பு ரயில் (வ.எண்.06012) வருகிற 26-ந் தேதி வரையும், தாம்பரம்-நாகர்கோவில் சிறப்பு ரயில் (வ.எண்.06011) வருகிற 27-ந் தேதி வரையும் இயக்கப்படுகின்றன..
சென்னை சென்டிரல்-நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் (வ.எண்.06051/06052) இரு மார்க்கங்களிலும் வருகிற 23-ந் தேதி வரையிலும், நாகர்கோவில்-பெங்களூரு எஸ்.எம்.வி.டி. சிறப்பு ரயில் (வ.எண்.06067/06068) இரு மார்க்கங்களிலும் வருகிற 22-ந் தேதி வரையிலும், தாம்பரம்-நாகர்கோவில் ரயில் (வ.எண்.06061) வருகிற 24-ந் தேதி வரையிலும், நெல்லை-சென்னை சிறப்பு ரயில் (வ.எண்.06069/06070) இரு மார்க்கங்களிலும் வருகிற 24-ந் தேதி வரையிலும்,
சென்னை-நெல்லை சிறப்பு ரயில் (வ.எண்.06055) இரு மார்க்கங்களிலும் வருகிற 14-ந் தேதி வரையிலும், நெல்லை-சென்னை சிறப்பு ரயில் (வ.எண்.06001/06002) இரு மார்க்கங்களிலும் நாளை(திங்கட்கிழமை) வரை, மங்களூரு சென்டிரல்- தாம்பரம் சிறப்பு ரயில் (வ.எண்.06065) வருகிற 25-ந் தேதி வரையிலும், திண்டுக்கல்-கோவை (பழனி, பொள்ளாச்சி) சிறப்புக்கட்டண முற்றிலும் பொதுப்பெட்டிகளை கொண்ட ரயில் (வ.எண்.06077/06078) இரு மார்க்கங்களிலும் வருகிற 14-ந் தேதி வரையும் இயக்கப்படுகின்றன.
இந்த சிறப்பு ரயில்களில் வழக்கமான கட்டணத்தை விட 1.2 மடங்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லையப்பர் கோயிலில் வருஷாபிஷேக விழா: திரளான பக்தர்கள் தரிசனம்!
வியாழன் 8, மே 2025 3:56:15 PM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் 92.57 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி
வியாழன் 8, மே 2025 12:51:53 PM (IST)

சுற்றுலாதலங்களில் மதி அங்காடி நடத்துவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு: ஆட்சியர் தகவல்
வியாழன் 8, மே 2025 11:21:00 AM (IST)

தமிழ்நாட்டில் வெற்றிவேல் வீரவேல் ஆபரேஷன் : நயினார் நாகேந்திரன் பேட்டி
புதன் 7, மே 2025 4:37:46 PM (IST)

தமிழறிஞர் கால்டுவெல் 211-வது பிறந்தநாள் விழா: தமிழக அரசின் சார்பில் ஆட்சியர் மரியாதை!
புதன் 7, மே 2025 12:11:51 PM (IST)

நெல்லை மாநகர் குளங்களில் அமலைச் செடிகள் அகற்றும் பணி: ஆட்சியர் இரா.சுகுமார் ஆய்வு
செவ்வாய் 6, மே 2025 4:36:31 PM (IST)
