» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நெல்லையில் பட்டாசு வெடிப்பதில் விதிமீறல்: 50 போ் மீது வழக்கு

திங்கள் 13, நவம்பர் 2023 5:56:03 PM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் விதிகளை மீறி ஆபத்துகளை விளைவிக்கும் வகையில் பட்டாசுகளை வெடித்த 50 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

திருநெல்வேலி மாநகரப் பகுதிகளில் அரசின் வழிகாட்டு நெறிகளை மீறி குறிப்பிட்ட நேரத்திற்கு மேலும் ஆபத்தை விளைவிக்கும் வகையிலும் பட்டாசுகளை வெடித்ததாக பாளையங்கோட்டை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் 5 வழக்குகள், அரசு மருத்துவக் கல்லூரி காவல் நிலைய பகுதியில் 4 வழக்குகள், மேலப்பாளையம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் 5 வழக்குகள், 

திருநெல்வேலி நகரம், திருநெல்வேலி சந்திப்பு, தச்சநல்லூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் 6 வழக்குகள், பேட்டை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் 3 வழக்குகள் என திருநெல்வேலி மாநகரப் பகுதியில் 23 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மாவட்டத்தின் பிற பகுதிகளில் விதிகளை மீறி பட்டாசுகளை வெடித்ததாக 27 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory