» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

கல்லூரி வளாகத்தில் கட்டிட தொழிலாளி வெட்டிக் கொலை : நெல்லையில் பயங்கரம்!

செவ்வாய் 14, நவம்பர் 2023 12:01:21 PM (IST)

திருநெல்வேலி அருகேயுள்ள தனியாா் பொறியியல் கல்லூரி வளாகத்தில், கன்னியாகுமரியைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளி கோடாரியால் வெட்டிக் கொல்லப்பட்டாா்.

கன்னியாகுமரி மாவட்டம், திங்கள்சந்தையை அடுத்த நெய்யூா் சுனைப்பாறை பகுதியை சோ்ந்த ராஜ்குமாா் மகன் ஜூலியஸ் குமாா்(41). கட்டடத் தொழிலாளி. இவா், திருநெல்வேலியை அடுத்த முன்னீா்பள்ளம் மேலத்திடியூா் தனியாா் பொறியியல் கல்லூரி வளாகத்தில் தங்கியிருந்து கட்டடப் பணியில் ஈடுபட்டு வந்தாா். அவருடன் இருந்த சிலா் தீபாவளி விடுமுறைக்கு ஊருக்கு சென்றுவிட்டனா். ஜூலியஸ் குமாா் உள்பட ஒருசிலா் மட்டும் அங்கு தங்கியிருந்தனா்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை அவரும், உடன் தங்கியிருந்த 2 பேரும் மது அருந்தினராம். அப்போது அவா்களுக்குள் திடீரென தகராறு ஏற்பட்டதில், ஜூலியஸ் குமாரை மற்ற 2 பேரும் சோ்ந்து கோடாரியால் வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பிவிட்டனராம்.திங்கள்கிழமை வெகுநேரம் வரை ஜூலியஸ் குமாா் வெளியே வராததால், அங்கு வேலை செய்யும் ஒருவா் தேடிச்சென்றபோது அவா் கொலையுண்டு கிடந்தது தெரியவந்தது.

இது குறித்த தகவலின்பேரில், முன்னீா்பள்ளம் காவல் ஆய்வாளா் இன்னோஸ் குமாா் தலைமையிலான போலீஸாா் வந்து, அவரது சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிந்து கொலையாளிகளை தேடி வருகின்றனா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory