» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நெல்லையில் டிச.12ம் தேதி தனியார் துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்

செவ்வாய் 14, நவம்பர் 2023 5:56:33 PM (IST)

நெல்லை பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரியில் வருகிற டிச.12ம் தேதி (சனிக்கிழமை) நான்காவது தனியார் துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் சார்பாக கலைஞர் நூற்றாண்டு விழா சிறப்பித்தல் தொடர்பில் தமிழ்நாடு முழுவதும் 100 வேலைவாய்ப்பு முகாம்கள் நடைபெற்று வருகிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் ஏற்கனவே, 3 வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்ட நிலையில் நான்காவது தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 02.12.2023 (சனிக்கிழமை) அன்று காலை 09.00 மணி முதல் பிற்பகல் 02.00 மணி வரை பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரி, வண்ணாரப்பேட்டையில் வைத்து நடைபெறவுள்ளது.
இத்தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் 5-ஆம் வகுப்பு முதல் பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்பு, பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐ.டி.ஐ. போன்ற கல்வித் தகுதியுடைய அனைவரும் கலந்து கொள்ளலாம். இம்முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் தங்களது சுய விபரம் (Resume), கல்விச் சான்று, ஆதார் அட்டை ஆகியவற்றின் நகல்களுடன் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் நாளில் காலை 09.00 மணிக்கு வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்கலாம். 

இம்முகாமில் கலந்து கொள்ள விரும்பும் வேலைநாடுநர்கள் tirunelveli.nic.in என்ற இணையத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம். முகாமில் கலந்து பங்கேற்க விருப்பமுள்ள தனியார் துறை நிறுவனங்கள் https://bit.ly/tvlempreg3 என்ற இணைப்பில் பதிவு செய்வது அவசியமாகும். மேலும், தனியார் துறை வேலைவாய்ப்பு இணையத்திலும் (www.tnprivatejobs.tn.gov.in) வேலைநாடுநர்கள் மற்றும் நிறுவனங்கள் தங்களது விவரங்களை பதிவு செய்தல் வேண்டும். வேலைவாய்ப்பு தொடர்பான பல்வேறு தகவல்களை பெற NELLAI EMPLOYMENT OFFICE என்ற Telegram Channel –இல் இணைந்து பயன்பெறலாம்.

இவ்வேலைவாய்ப்பு முகாமில் சென்னையில் செயல்பட்டு வரும் அரசு நிறுவனமான அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் (Overseas Manpower Corporation Limited) நேரடியாக கலந்து கொண்டு அயல்நாட்டில் பணி புரிய விருப்பமுள்ள வேலைநாடுநர்களை பதிவு செய்ய உள்ளனர். மேலும் திறன் பயிற்சி பெறுதல், சுயதொழில் தொடங்குதல் போன்றவற்றிற்கு மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், மாவட்ட தொழில் மையம், முன்னோடி வங்கி, தாட்கோ அலுவலகம் போன்றவை தனித்தனியாக அரங்குகள் அமைத்து வேலைநாடுநர்களை பதிவு செய்ய உள்ளனர்.
இம்முகாமில் பணிநியமனம் பெறும் பதிவுதாரர்களுடைய வேலைவாய்ப்பு பதிவு மூப்பு இரத்து செய்யப்படமாட்டது எனவும் வேலைநாடுநர்கள் இத்தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்று பயனடையுமாறும் மாவட்ட ஆட்சித் தலைவர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory