» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
எழும்பூர்-நெல்லை இடையே வந்தே பாரத் சிறப்பு ரயில் : தெற்கு ரயில்வே அறிவிப்பு
புதன் 15, நவம்பர் 2023 8:28:18 AM (IST)
கூட்ட நெரிசலை தவிர்க்க சென்னை எழும்பூர்-நெல்லை இடையே வந்தே பாரத் சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தீபாவளி பண்டிகையின்போது கூட்ட நெரிசலை தவிர்க்க சென்னை எழும்பூர்- நெல்லை இடையே வந்தே பாரத் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது. இந்த ரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் டிக்கெட்டுகள் விற்றுத்தீர்ந்தன. மேலும், இதுபோன்ற வந்தே பாரத் சிறப்பு ரயில்கள் இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை வைத்து வந்தனர்.
இந்தநிலையில், சென்னை எழும்பூர்-மதுரை இடையே இயக்கப்படும் தேஜஸ் ரயில் வியாழக்கிழமை தோறும் பராமரிப்பு பணி காரணமாக ரயில் சேவைகள் ரத்து செய்யப்படும். எனவே, அந்த வழித்தடத்தில் கூடுதலாக நாளை (16-ந்தேதி) முதல் டிசம்பர் 28-ந்தேதி வரை அனைத்து வியாழக்கிழமைகளிலும் வந்தே பாரத் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. மேலும், வழக்கமான கட்டணத்தைவிட கூடுதல் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து, தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: பயணிகளின் நலனுக்காகவும், ரயில்களில் ஏற்படும் கூட்ட நெரிசலை குறைப்பதற்காகவும் சென்னை எழும்பூர்-நெல்லை இடையே வந்தே பாரத் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.
அந்த வகையில், சென்னை எழும்பூரில் இருந்து நாளை (வியாழக்கிழமை), 23, 30 மற்றும் டிசம்பர் 7, 14, 21, 28 ஆகிய தேதிகளில் காலை 6 மணிக்கு வந்தே பாரத் சிறப்பு ரயில் (வண்டி எண்.06067) புறப்பட்டு அதே நாள் மதியம் 2.15 மணிக்கு நெல்லை வந்தடையும். மறுமார்க்கமாக நெல்லையில் இருந்து நாளை (வியாழக்கிழமை), 23, 30 மற்றும் டிசம்பர் 7, 14, 21, 28 ஆகிய தேதிகளில் மதியம் 3 மணிக்கு வந்தே பாரத் சிறப்பு ரயில் (06068) புறப்பட்டு அதே நாள் இரவு 11.15 மணிக்கு சென்னை எழும்பூர் ரயில்நிலையம் சென்றடையும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லையப்பர் கோயிலில் வருஷாபிஷேக விழா: திரளான பக்தர்கள் தரிசனம்!
வியாழன் 8, மே 2025 3:56:15 PM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் 92.57 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி
வியாழன் 8, மே 2025 12:51:53 PM (IST)

சுற்றுலாதலங்களில் மதி அங்காடி நடத்துவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு: ஆட்சியர் தகவல்
வியாழன் 8, மே 2025 11:21:00 AM (IST)

தமிழ்நாட்டில் வெற்றிவேல் வீரவேல் ஆபரேஷன் : நயினார் நாகேந்திரன் பேட்டி
புதன் 7, மே 2025 4:37:46 PM (IST)

தமிழறிஞர் கால்டுவெல் 211-வது பிறந்தநாள் விழா: தமிழக அரசின் சார்பில் ஆட்சியர் மரியாதை!
புதன் 7, மே 2025 12:11:51 PM (IST)

நெல்லை மாநகர் குளங்களில் அமலைச் செடிகள் அகற்றும் பணி: ஆட்சியர் இரா.சுகுமார் ஆய்வு
செவ்வாய் 6, மே 2025 4:36:31 PM (IST)
