» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
நெல்லை பேட்டையில் வாலிபர் சரமாரி வெட்டிக்கொலை: மர்மகும்பல் வெறிச்செயல்
புதன் 15, நவம்பர் 2023 8:33:34 AM (IST)
நெல்லை பேட்டையில் இரவில் வாலிபர் சரமாரி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட மர்மகும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.
நெல்லை டவுன் கோடீஸ்வரன் நகரைச் சேர்ந்தவர் காதர் ஒலி மகன் அசார் முகம்மது (35). இவர் நெல்லை சந்திப்பு பகுதியில் சூப்பர் மார்க்கெட் நடத்தி வந்தார். நேற்று இரவில் அசார் முகம்மது நெல்லை பேட்டை திரிபுரசுந்தரி அம்மன் கோவில் தெருவில் நின்று கொண்டு இருந்தார்.
அப்போது, அங்கு வந்த மர்மகும்பல் திடீரென்று அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் அசார் முகம்மதுவை சரமாரியாக வெட்டினர். இதில் உடலில் பலத்த காயம் வெட்டுக்காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட மர்ம கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டது.
இதுகுறித்து உடனடியாக பேட்டை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நெல்லை மேற்கு பகுதி துணை கமிஷனர் சரவணக்குமார், டவுன் உதவி கமிஷனர் ஆவுடையப்பன், பேட்டை இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ேஷாபா ெஜன்சி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
அசார் முகம்மது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் அங்குள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகிறார்கள். கொலைக்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
ெகாலை செய்யப்பட்ட அசார் முகம்மதுவுக்கு ஹமீதா என்ற மனைவியும், 2 பெண் குழந்தையும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். நெல்லை பேட்டையில் இரவில் வாலிபர் சரமாரி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லையப்பர் கோயிலில் வருஷாபிஷேக விழா: திரளான பக்தர்கள் தரிசனம்!
வியாழன் 8, மே 2025 3:56:15 PM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் 92.57 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி
வியாழன் 8, மே 2025 12:51:53 PM (IST)

சுற்றுலாதலங்களில் மதி அங்காடி நடத்துவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு: ஆட்சியர் தகவல்
வியாழன் 8, மே 2025 11:21:00 AM (IST)

தமிழ்நாட்டில் வெற்றிவேல் வீரவேல் ஆபரேஷன் : நயினார் நாகேந்திரன் பேட்டி
புதன் 7, மே 2025 4:37:46 PM (IST)

தமிழறிஞர் கால்டுவெல் 211-வது பிறந்தநாள் விழா: தமிழக அரசின் சார்பில் ஆட்சியர் மரியாதை!
புதன் 7, மே 2025 12:11:51 PM (IST)

நெல்லை மாநகர் குளங்களில் அமலைச் செடிகள் அகற்றும் பணி: ஆட்சியர் இரா.சுகுமார் ஆய்வு
செவ்வாய் 6, மே 2025 4:36:31 PM (IST)

தனி ஆளாகNov 15, 2023 - 02:25:44 PM | Posted IP 172.7*****