» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

அரசு பஸ் டிரைவர், கண்டக்டருக்கு அரிவாள் வெட்டு: போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்கள் போராட்டம்!

வியாழன் 16, நவம்பர் 2023 11:47:24 AM (IST)



வீரவநல்லூரில் அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துனர் ஆகியோரை அரிவாளால் வெட்டிய நபர்களை கைது செய்யக்கோரி போக்குவரத்துத் தொழிலாளர்கள் பேருந்துகளை இயக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் கொல்லங்கோடு பகுதியைச் சேர்ந்த முத்துசாமி மகன் ரெஜி (45). அரசு பேருந்து ஓட்டுநர். தென்காசி மாவட்டம், முக்கூடல் அருகேயுள்ள இடைகால் கிராமத்தைச் சேர்ந்த ராமானுஜம் மகன் கண்ணன் (35) அரசு பேருந்து நடத்துனர். இருவரும் புதன்கிழமை (நவ. 15) மாலை 6.30 மணியளவில் பாபநாசம் பணிமனையில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் பேருந்தை இயக்கினர்.

கல்லிடைக்குறிச்சி பேருந்து நிறுத்தத்தில் மோட்டார் பைக்கில் வந்த மூவர் பேருந்தை வழி மறித்து நிறுத்தி, இருவர் பேருந்தில் ஏறியுள்ளனர். இதற்கு பேருந்து ஓட்டுநர் ரெஜி கண்டித்துள்ளார். இதுகுறித்து பேருந்தில் பயணித்த இருவரும் மோட்டார் சைக்கிளில் விட்டுச் சென்றவரிடம் தகவல் தெரிவித்ததையடுத்து ஆத்திரமடைந்த மோட்டார் பைக்கில் வந்தவர் மற்றும், பேருந்தில் பயணித்த மூவரும் சேர்ந்து வீரவநல்லூரில் நிறுத்தத்தில் பேருந்து நின்றபோது ஓட்டுநர் ரெஜியை அரிவாளால் வெட்டினர். இதனை தடுக்க வந்த நடத்துனர் கண்ணனையும் அவர்கள் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்று விட்டனர். 

இதையடுத்து இன்று காலை அரசுப் போக்குவரத்துக் கழக பாபநாசம் பணிமனையில்  ஓட்டுநர் மற்றும் நடத்துனர் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய வலியுறுத்தி அனைத்து ஓட்டுநர், நடத்துனர்களும் பேருந்துகளை இயக்காமல் வீரவநல்லூரில் ஓட்டுநர் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்வது, பாதிக்கப்பட்வருக்கு இழப்பீடு வழங்குவது, காயம்பட்டவர் குணமாகும் வரை மருத்துவ விடுப்பில் கழிக்காமல் பணி நாட்களாகக் கொள்வது உள்ளிட்டக் கோரிக்கைகளை  வலியுறுத்தி அனைத்து ஓட்டுநர், நடத்துநர்களும் பேருந்துகளை இயக்காமல் சுமார் இருநூறுக்கும் மேற்பட்டத் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

இதனால் 60க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படாமல் பணிமனையில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. தொழிலாளர்கள் போராட்டத்தால் பணிமனையில் நிறுத்தப்பட்டுள்ள பேருந்துகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களிடம் போக்குவரத்துக்கழக அதிகாரிகள் பூன்ராஜ், சுப்பிரமணியன், சசிக்குமார், அம்பாசமுத்திரம் காவல் துணைக் கண்காணிப்பாளர் சதீஷ் குமார் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory