» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நலதிட்ட உதவிகள் : ஆட்சியர் வழங்கினார்!
திங்கள் 20, நவம்பர் 2023 5:02:37 PM (IST)

திருநெல்வேலி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன், வழங்கினார்
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்டரங்கில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் கார்த்திகேயன், தலைமையில் இன்று (20.11.2023) நடைபெற்றது.இக்கூட்டத்தில், பொதுமக்களிடம் இருந்து மாற்றுத்திறனாளிகள் உதவித்தெகை, முதிர்கன்னி உதவித்தொகை, விபத்து மரண உதவித்தொகை, இலவச வீட்டுமனை பட்டா, பட்டா மற்றும் பட்டா மாறுதல் வேலைவாய்ப்பு, மற்றும் குடிநீர், சாலை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான 250-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டது.
இம்மனுக்களை சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து மனுக்களை பரிசீலனை செய்ய உரிய நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவிட்டார்கள். மேலும் முதலமைச்சரின் தனிப்பிரிவுகள் மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்குமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்கள்.
இக்கூட்டத்தில், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் 7 பயனாளிகளுக்கு தலா ரூ.6552/- மதிப்பிலான விலையில்லா தேய்ப்பு பெட்டிகளும், 4 பயனாளிகளுக்கு தலா ரூ.5900/- மதிப்பிலான விலையில்லா தையல் இயந்திரங்களை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன், வழங்கினார். இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் மா.சுகன்யா , தனித்துணை ஆட்சியர் ஜெயா, உதவி ஆணையர் கலால் ராமநாதன் மற்றும் அனைத்து துறை சார்ந்த அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நிதி நிறுவன உரிமையாளரை மிரட்டி நகை, செல்போன் பறிப்பு: தந்தை-மகன் கைது
வியாழன் 22, ஜனவரி 2026 8:10:07 AM (IST)

ரயிலில் பயணி தவறவிட்ட ரூ.6 லட்சம் பொருட்கள் மீட்பு: துரிதமாக செயல்பட்ட போலீசாருக்கு பாராட்டு!
வியாழன் 22, ஜனவரி 2026 8:08:40 AM (IST)

சேரன்மகாதேவியில் போலீஸ் பொதுமக்கள் நல்லுறவு போட்டி
புதன் 21, ஜனவரி 2026 8:28:01 PM (IST)

திருநெல்வேலியில் 1.3 கிலோ கஞ்சா பதுக்கியவர் கைது: பைக் பறிமுதல்!
புதன் 21, ஜனவரி 2026 5:02:15 PM (IST)

நெல்லையில் கொலை வழக்கில் கைதானவர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது!
புதன் 21, ஜனவரி 2026 3:32:52 PM (IST)

நெல்லை அருகே கூட்டம், கூட்டமாக வலசை வந்த வெளிநாட்டு பறவைகள்!
செவ்வாய் 20, ஜனவரி 2026 8:03:08 PM (IST)

