» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
ராஜஸ்தான் உட்பட 3 மாநில தேர்தலில் வெற்றி : பாஜகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!
திங்கள் 4, டிசம்பர் 2023 10:17:04 AM (IST)

ராஜஸ்தான் உட்பட 3 மாநில தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதை தொடர்ந்து சங்கரன்கோவிலில் பாஜகவினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பழைய பேருந்து நிலையம் முன்பு ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற தேர்தல்களில் பாஜக தொடர்ந்து முன்னிலையில் இருப்பதையடுத்து சங்கரன்கோவில் பழைய பேருந்து நிலையம் முன்பு பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் தங்கள் வெற்றியை கொண்டாடினர். பாஜக நகர தலைவர் கணேசன் தலைமை வகித்தார்.
மாவட்டச் செயலாளர் ராஜலஷ்மி, நகர பொதுச்செயலாளர்கள் மணிகண்டன் கோமதிநாயகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட நெசவாளர் அணி தலைவர் சங்கரலிங்கம், நகரப் பொருளாளர் சிவசங்கர், வர்த்தகரணி மாவட்ட துணைத் தலைவர் சுப்பிரமணியன், இந்து முன்னணி மாவட்ட தலைவர் ஆறுமுகச்சாமி, பிரச்சார பிரிவு மாவட்ட துணைத் தலைவர் ரவி பாண்டியன் பாஜக நிர்வாகிகள் செந்தில்குமார், லட்சுமண பெருமாள், சங்கர் ராஜ், மகேந்திரன், குருசாமி, மாணிக்கம், குமார், பிரதீப், சண்முகையா, நாராயணன், பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லையப்பர் கோயிலில் வருஷாபிஷேக விழா: திரளான பக்தர்கள் தரிசனம்!
வியாழன் 8, மே 2025 3:56:15 PM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் 92.57 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி
வியாழன் 8, மே 2025 12:51:53 PM (IST)

சுற்றுலாதலங்களில் மதி அங்காடி நடத்துவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு: ஆட்சியர் தகவல்
வியாழன் 8, மே 2025 11:21:00 AM (IST)

தமிழ்நாட்டில் வெற்றிவேல் வீரவேல் ஆபரேஷன் : நயினார் நாகேந்திரன் பேட்டி
புதன் 7, மே 2025 4:37:46 PM (IST)

தமிழறிஞர் கால்டுவெல் 211-வது பிறந்தநாள் விழா: தமிழக அரசின் சார்பில் ஆட்சியர் மரியாதை!
புதன் 7, மே 2025 12:11:51 PM (IST)

நெல்லை மாநகர் குளங்களில் அமலைச் செடிகள் அகற்றும் பணி: ஆட்சியர் இரா.சுகுமார் ஆய்வு
செவ்வாய் 6, மே 2025 4:36:31 PM (IST)
