» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
நலவாரிய உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவிகள் : ஆட்சியர் தலைமையில் கண்காணிப்புக்குழு கூட்டம்
செவ்வாய் 5, டிசம்பர் 2023 5:18:52 PM (IST)

அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்களில் பதிவு பெற்ற உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவிகள் விரைவாக சென்றடைவதை கண்காணிப்பதற்காக அமைக்கப்பட்ட மாவட்ட கண்காணிப்புக்குழு கூட்டம் மாவட்ட ஆட்சியர் கா.ப.கார்த்திகேயன், தலைமையில் நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்களில் பதிவு பெற்ற உறுப்பினர்களுக்கு நலதிட்ட உதவிகள் விரைவாக சென்றடைவதை கண்காணிப்பதற்காக அமைக்கப்பட்ட மாவட்ட கண்காணிப்புக்குழு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர்.கா.ப.கார்த்திகேயன், தலைமையில் இன்று (05.12.2023) நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்டத்தில் அமைப்புசாரா தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களை கண்டறிந்து அவர்களை நல வாரியங்களில் உறுப்பினர்களாக சேர்ப்பதற்கும் குறிப்பாக வீட்டுப்பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களிடம் நலத்திட்ட உதவிகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி அவர்களை வீட்டுப்பணியாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினர்களாக சேர்ப்பதற்கு தொழிற்சங்கங்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்தார்.
மேலும், கூட்டத்தில் நல வாரியங்களில் உறுப்பினர்களை சேர்ப்பதற்கு ஏதுவாக முகாம்கள் நடத்தப்படுவது குறித்தும் மற்றும் நலத்திட்ட உதவிகள் விரைவாக பயனாளிகளுக்கு சென்றடைவதை குறித்தும் விவாதிக்கப்பட்டது.
தொடர்ந்து, இராதாபுரம் வட்டம், லெவிஞ்சிபுரம் கிராமம், கன்னங்குளத்தை சேர்ந்த பதிவு பெற்ற கட்டுமானத் தொழிலாளி (லேட்) தங்கதுரை என்பவரின் பணியிடத்து விபத்து மரணத்திற்கான உதவி தொகை ரூ.5,00,000/- (ரூபாய் ஐந்து இலட்சம் மட்டும்) தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல நிதியிலிருந்து வழங்குவதற்கான ஆணையினை இறந்த தொழிலாளியின் மனைவி தங்கபுஷ்பம் என்பவரிடம் மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கினார்.
இக்கூட்டத்தில், தொழிலாளர் துணை ஆணையர் க.பாலமுருகன், திருநெல்வேலி, தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) நா.முருகப்பிரசன்னா, அரசு தரப்பு பிரதிநிதிகள், வேலையளிப்போர் தரப்பு பிரதிநிதிகள் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லையப்பர் கோயிலில் வருஷாபிஷேக விழா: திரளான பக்தர்கள் தரிசனம்!
வியாழன் 8, மே 2025 3:56:15 PM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் 92.57 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி
வியாழன் 8, மே 2025 12:51:53 PM (IST)

சுற்றுலாதலங்களில் மதி அங்காடி நடத்துவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு: ஆட்சியர் தகவல்
வியாழன் 8, மே 2025 11:21:00 AM (IST)

தமிழ்நாட்டில் வெற்றிவேல் வீரவேல் ஆபரேஷன் : நயினார் நாகேந்திரன் பேட்டி
புதன் 7, மே 2025 4:37:46 PM (IST)

தமிழறிஞர் கால்டுவெல் 211-வது பிறந்தநாள் விழா: தமிழக அரசின் சார்பில் ஆட்சியர் மரியாதை!
புதன் 7, மே 2025 12:11:51 PM (IST)

நெல்லை மாநகர் குளங்களில் அமலைச் செடிகள் அகற்றும் பணி: ஆட்சியர் இரா.சுகுமார் ஆய்வு
செவ்வாய் 6, மே 2025 4:36:31 PM (IST)
