» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தி.மு.க. சார்பில் தேர்தல் பிச்சார பொதுக்கூட்டம் : அமைச்சர் கீதாஜீவன் அறிக்கை!

சனி 10, பிப்ரவரி 2024 3:52:23 PM (IST)

தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் வருகிற 14ஆம் தேதி கோவில்பட்டியில் மாபெரும் தேர்தல் பிச்சார பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.

இது தொடர்பாக திமுக வடக்கு மாவட்டச் செயலாளர் அமைச்சர் பி.கீதாஜீவன் வெளியிட்ட அறிவிப்பு :  விரைவில் நடைபெற இருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாடு பாண்டிச்சேரி உட்பட 40 தொகுதிகளையும் தி.மு.க. கூட்டணி வெற்றிபெற வேண்டும் என்று தி.மு.கழக தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்கள். 

கழகத் தலைவரின் உத்தரவுக்கு இணங்க தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் INDIA கூட்டணி பல லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக தேர்தல் பணிகள் இப்பொழுதே முடிக்கிவிடப்பட்டுள்ளது. அதன் ஒரு கட்டமாக தி.மு.கழக அரசின் சாதனைகளை பொதுமக்களிடம் எடுத்துச் சொல்லும் விதமாக கோவில்பட்டியில் வருகிற 14.02.2024 புதன்கிழமை மாலை 6.00 மணி அளவில் கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி தி.மு.க சார்பில் மந்திதோப்பு சாலையில் உள்ள கலைஞர் திடலில் மாபெரும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற இருக்கிறது. 

மாவட்டச் செயலாளராகிய (பி.கீதா ஜீவன்) ஆகிய என்னுடைய தலைமையில் நடைபெறும் இந்த பொதுக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக தி.மு.கழக துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி, மா.கம்யூ, கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜிவி மார்க்கண்டேயன் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். 

தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ், இ.கம்யூ, மா.கம்யூ, ம.தி.மு.க. வி.சி.க., இ.யூ.மூஸ்லீம்லீக், மனிதநேய மக்கள் கட்சி, ஆதித்தமிழர் பேரவை, சமத்துவ மக்கள் கட்சிகளின் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெறவுள்ள இந்த பொதுக்கூட்டத்திற்கு தி.மு.கழக நிர்வாகிகள், கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள், உள்ளாட்சிமன்ற பிரதிநிதிகள், கழக செயல்வீரர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் இதனையே அழைப்பாக ஏற்று பெருந்திரளாகக் கலந்து கொள்ள அன்புடன் அழைக்கிறேன். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து

சமத்துவ மக்கள் கட்சிFeb 10, 2024 - 03:57:10 PM | Posted IP 162.1*****

சமத்துவ மக்கள் கட்சி in DMK alliance??

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory