» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

பைக் விபத்தில் ஐடிஐ மாணவர் பலி; நண்பர் படுகாயம்; தூத்துக்குடியில் பரிதாபம்!

திங்கள் 12, பிப்ரவரி 2024 11:01:57 AM (IST)

தூத்துக்குடியில் பைக் விபத்தில் ஐடிஐ மாணவர் உயிரிழந்தார். அவரது நண்பர் படுகாயம் அடைந்தார். 

தூத்துக்குடி சிலுவைபட்டி சுனாமி காலனியைச் சேர்ந்தவர் கில்டஸ் மகன் மரிய அந்தோணி அலெக்ஸ் (19). இவர் தூத்துக்குடி ஐடிஐ-யில் டிப்ளமோ மெக்கானிக்கல் இன்ஜினியரிங் 3ஆம் ஆண்டும் படித்து வருகிறார். இவர் நேற்று தனது நண்பரான அதே பகுதியைச் சேர்ந்த ஞானபிரகாசம் மகன் சேசுராஜ் (20) என்பவருடன் பைக்கில் சிலுவைப்பட்டி மெயின் ரோட்டில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது பைக் நிலைதடுமாறி அங்குள்ள கோவில் காம்பவுன்ட் சுவரில் மோதி விபத்துள்ளானது. இதில் பைக்கின் பின்னால் அமர்ந்திருந்த மரிய அந்தோணி அலெக்ஸ் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது நண்பர் சேசுராஜ் படுகாயம் அடைந்து தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து குறித்து தாளமுத்துநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆதாம் அலி வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். 


மக்கள் கருத்து

ப.சங்கர்Feb 12, 2024 - 12:10:59 PM | Posted IP 172.7*****

நீங்கள் வெளியிட்டுள்ள படத்தில் கார் மோதி விழுந்தது போல அல்லவா இருக்கிறது

ப.சங்கர்Feb 12, 2024 - 12:09:56 PM | Posted IP 172.7*****

படத்தில் கார் மோதி விழுந்தது போல அல்லவா இருக்கிறது..

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory