» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

மத்திய அரசில் 17,727 காலிப்பணியிடங்கள் : விண்ணப்பங்கள் வரவேற்பு!

செவ்வாய் 23, ஜூலை 2024 12:09:11 PM (IST)

மத்திய அரசில் 17,727 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான SSC CGL, SSC MTS மற்றும் அஞ்சல் துறை தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் வருமான வரி ஆய்வாளர், ஆய்வாளர்(மத்திய கலால்), உதவி தணிக்கை அலுவலர், உதவி அமலாக்க அலுவலர், உதவி கணக்கு அலுவலர் போன்ற உயர் பதவிகளில் உள்ள 17,727 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான SSC CGL (COMBINED GRADUATE LEVEL EXAMINATION) தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. 

இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏதேனும் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். வயது வரம்பு 18 முதல் 30 வரை ஆகும். இட ஒதுக்கீடு அடிப்படையில் வயது வரம்பில் சலுகை வழங்கப்படுகிறது. இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 24.07.2024 ஆகும்.

இதே போன்று மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் 8326 காலிப்பணியிடங்களுக்கான SSC MTS (MULTI TASKING STAFF) மற்றும் HAVALDAR தேர்வுக்கான அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது. இத்தேர்வுக்கான கல்வித்தகுதி பத்தாம் வகுப்பு ஆகும். வயது வரம்பு 18 முதல் 27 வரை ஆகும். இட ஒதுக்கீடு அடிப்படையில் வயது வரம்பில் சலுகை வழங்கப்படுகிறது. விண்ணப்பிக்க கடைசி நாள் 31.07.2024 ஆகும்.

SSC CGL மற்றும் SSC MTS தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க பெண்கள், SC/ST பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் ஏதும் இல்லை. இதர பிரிவை சேர்ந்த ஆண்களுக்கு ரூ.100/- என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களை https://ssc.gov.in/ என்ற இணையத்தளத்தில் அறியலாம்.

மேலும் இந்திய அஞ்சல் துறையில் கிராமின் தக் சேவக் (GDS) எனப்படும் கிளை அஞ்சல் நிலைய அலுவலர் மற்றும் உதவி கிளை அஞ்சல் நிலைய அலுவலர் பணிகளுக்கான அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. இந்திய அளவில் 44,228 காலி பணியிடங்களும் தமிழ்நாட்டில் மட்டும் 3789 காலி பணியிடங்களும் உள்ளன.

வயது வரம்பு 18 முதல் 40 ஆகும். கல்வித்தகுதி பத்தாம் வகுப்பு ஆகும். இப்பணியிடங்களுக்கு தேர்வு கிடையாது. 10 ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே உத்தேச பட்டியல் வெளியிடப்படும். கூடுதல் விவரங்களை https://indiapostgdsonline.gov.in/ என்ற இணையத்தளத்தில் அறியலாம்.

SSC CGL, SSC MTS, இந்திய அஞ்சல் துறை ஆகிய மூன்று தேர்வுகளுக்கும் சேர்த்து 70,281 பணிகளுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே இத்தேர்வுகளுக்கு தகுதி வாய்ந்த இளைஞர்கள் விண்ணப்பித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் கா.ப.கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

39வது தேசிய கண் தானே இரு வார நிறைவு விழா

வெள்ளி 6, செப்டம்பர் 2024 7:57:40 PM (IST)

விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி மும்முரம்

வியாழன் 5, செப்டம்பர் 2024 3:44:43 PM (IST)


Sponsored Ads



Tirunelveli Business Directory