» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

அடிப்படை வசதிகள் செய்து கொடுக்காத ஊராட்சி மன்றத் தலைவர் மீது கிராம மக்கள் புகார்!

திங்கள் 12, பிப்ரவரி 2024 11:22:37 AM (IST)



மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்காத மேலஅரசடி ஊராட்சி மன்றத் தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக கிராம மக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் அளித்துள்ள மனு: தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் வட்டம், மேலஅரசடி ஊராட்சி மன்றத் தலைவர் ரோகிணிராஜ் என்பவர் பதவியேற்ற நாளில் இருந்து இன்று வரை எந்த விதமான அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கவில்லை. ஊராட்சி மன்ற அலுவலகம் அருகில் உள்ள மினிவிசை பம்பு சின்டெக்ஸ் டேங்க் பழுது அடைந்து தண்ணீர் வீணாக சிந்தி வருகிறது. 

இதை நாங்கள் ஊராட்சி மன்றத் தலைவரிடம் பலமுறை சொல்லியும் இதுவரை செய்து தரவில்லை. மேலும் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர், ஓட்டப்பிடாரம் ஒன்றிய பெருந்தலைவர் நேரில் வந்து சின்டெக்ஸ் டேங்கை பார்த்து விட்டு பழுது நீக்கம் செய்யச்சொல்லி ஊராட்சி மன்றத்தலைவரிடம் சொல்லியும் பழுது நீக்கம் செய்யவில்லை. 

தெரு விளக்கு, பொது சுகாதாரம் ஆகிய அடிப்படை வசதிகளும் செய்து தரவில்லை. ஊராட்சிமன்றத் தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். 


மக்கள் கருத்து

RamarFeb 12, 2024 - 03:26:43 PM | Posted IP 172.7*****

சீயோன் நகர் வீட்டு மனைகளுக்கு தண்ணீர் வழங்கப்படாது என்பதை திருத்தம் செய்துள்ளார்கள்.

ராமர்Feb 12, 2024 - 03:16:13 PM | Posted IP 172.7*****

சீயான் நகர் வீட்டுமனைகள் தண்ணீர் வழங்கப்படாது என்பதை திருத்தம் செய்துள்ளர்கள்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory