» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

மின் கம்பங்களில் விளம்பர பதாகைகள் மாட்ட தடை : காவல்துறை ஆணையருக்கு கோரிக்கை!

திங்கள் 12, பிப்ரவரி 2024 3:59:55 PM (IST)



நெல்லை மாநகரில் மின் கம்பங்களில் விளம்பர பதாகைகள் மாட்டப்படுவதை தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக திருநெல்வேலி காவல் ஆணையர் பா.மூர்த்திக்கு எம்பவர் நுகர்வோர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நடுவம் கௌரவ செயலாளர்  ஆ. சங்கர் அனுப்பியுள்ள மனு : திருநெல்வேலி மாநகரில் சமீபகாலமாக மின் கம்பங்களில் மிகப் பெரிய விளம்பர பதாகைகள் தொங்க விடப்பட்டு வருகின்றது. இந்த விளம்பரங்களால் வாகன ஓட்டிகளின் கவனம் சிதறுவதால் விபத்துகள் ஏற்படுகின்றது.

ஆகவே தாங்கள் இவ்விஷயத்தில் நேரிடையாக தலையிட்டு விளம்பர பதாகைகளை மின் கம்பங்களில் தொங்க விடுவதை உடனடியாக தடை செய்ய அன்புடன் வேண்டுகிறோம். மேலும் நெல்லை வண்ணார் பேட்டையில் தினமும் இரவு நேரங்களில் ஆப்பிள் ட்ரீ ஹோட்டல் முன்பு ஆம்னி பஸ்கள் நின்று பயணிகளை ஏற்றிச் செல்கின்றன. 

ஆம்னி பஸ்கள் ஓரமாக நின்று பயணிகளை ஏற்றாததால் அந்த வழியாக வரும் மற்ற வாகனங்கள் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கி தவிக்கின்றன. ஏற்கனவே அந்த இடத்தில் வெளியூர் செல்லும் பஸ்கள் நின்று பயணிகளை ஏற்றி இறக்குகின்றனர். ஆகவே இங்கு போக்குவரத்து காவலர்களை நியமிக்குமாறும், ஆம்னி பஸ்களை சற்று தள்ளி நிறுத்தவும் உத்திரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

39வது தேசிய கண் தானே இரு வார நிறைவு விழா

வெள்ளி 6, செப்டம்பர் 2024 7:57:40 PM (IST)


Sponsored Ads



Tirunelveli Business Directory