» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

ஸ்டெர்லைட் ஆலை தீர்ப்பை வரவேற்று பட்டாசு வெடித்து மக்கள் கொண்டாட்டம்!

வியாழன் 29, பிப்ரவரி 2024 7:58:47 PM (IST)



ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான தீர்ப்பை வரவேற்று தூத்துக்குடி மாவட்டத்தில் மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர். 

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் எனக்கூறி வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தை சென்னை உயர்நீதிமன்றம் சிறப்பாக கையாண்டது. ஆலை வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்ததில் வரம்புமீறல் இருந்ததாக கருதவில்லை. உயர்நீதிமன்ற முடிவில் தலையிட விரும்பவில்லை'' எனக்கூறி வழக்கை முடித்து வைத்தது.

ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்று தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாவட்ட குழு சார்பில் மாவட்ட செயலாளர் கே.பி.ஆறுமுகம் தலைமையில்  தூத்துக்குடி ராஜாஜி பூங்கா அருகே பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்வில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.எஸ்.அர்ஜுனன், ஆர்.ரசல், தா. ராஜா., எஸ்.அப்பாதுரை, மாநகர செயலாளர் எம்.எஸ்.முத்து, ஒன்றிய செயலாளர் கே.சங்கரன், வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் சுரேஷ், மாணவர் சங்க மாவட்ட தலைவர் கிஷோர் குமார், மாதர் சங்க மாநிலக்குழு உறுப்பினர் இணிதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


அதுபோல், உடன்குடியில் சமூக ஆர்வலர் குணசீலன் தலைமையில் பொதுமக்கள் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி உற்சாகத்தை வெளிப்படுத்தினர். 


மக்கள் கருத்து

MANIKANDAN BMar 3, 2024 - 02:45:29 AM | Posted IP 172.7*****

Please Note it,No new company won't come to Tamil Nadu for Industrial development.

MuthuMar 2, 2024 - 11:45:20 AM | Posted IP 172.7*****

தேர்தலுக்கு பிறகு மீண்டும் திறக்கும் சட்டத்தில் இடம் இருக்கு இது அரசியல் உள் நோக்கத்தில் மூடப்பட்டது அனைவருக்கும் தெரிந்த ஒன்று

G.saravananMar 2, 2024 - 09:53:22 AM | Posted IP 172.7*****

இன்னும் கொஞ்ச நாள் இருந்தால் பக்கத்து கிராமங்களில் உள்ள நீர் வளங்கள் அத்தனையும் சுரண்டி இருப்பார்கள் நீதிமன்றங்கள் இன்னும் தனித்துவமாக இயங்குவதால் நமது மக்களின் குடியுரிமை காப்பாற்றப்படுகிறது

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory