» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
பிரதமர் தமிழகத்திலேயே குடியேறினாலும் மக்கள் ஏற்க மாட்டார்கள் : கனிமொழி எம்.பி., பேச்சு!!
திங்கள் 4, மார்ச் 2024 10:10:23 AM (IST)

"தேர்தல் பயத்தில் பிரதமர் மோடி அடிக்கடி தமிழகத்துக்கு வந்து செல்கிறார், அவர் தமிழகத்திலேயே குடியேறினாலும் மக்கள் பாஜகவை ஏற்க மாட்டார்கள்" என்று கனிமொழி எம்பி பேசினார்.
விளாத்திகுளம் சட்டப்பேரவைத் தொகுதி திமுக மகளிா் அணி, மகளிா் தொண்டா் அணி ஆலோசனை கூட்டம் ஜீ.வி. மஹாலில் நேற்று நடைபெற்றது. தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலரும், சமூக நலன் - மகளிா் உரிமைத் துறை அமைச்சருமான பெ. கீதாஜீவன் தலைமை வகித்தாா். திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினரும், விளாத்திகுளம் எம்எல்ஏவுமான ஜீ. வி. மாா்க்கண்டேயன் முன்னிலை வகித்தாா்.
திமுக துணை பொதுச் செயலா் கனிமொழி எம்.பி. சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசியதாவது: திமுக ஆட்சியில் பெண்களுக்கு கொடுத்த அத்தனை வாக்குறுதிகளையும் தமிழ்நாடு முதல்வா் நிறைவேற்றி தந்துள்ளாா். இது பெண்களுக்கான, அவா்களின் உரிமைகளுக்கான, நலனுக்காக ஆட்சி. பாஜக ஆட்சி பெண்களுக்கு எதிரான ஆட்சி. நாடு முழுவதும் இருக்கக்கூடிய பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலையை உருவாக்கி கொண்டிருப்பது அந்த ஆட்சி. காங்கிரஸ் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட மகளிா் இட ஒதுக்கீடு மசோதாவை, பாஜக நிறைவேற்றி விட்டதாக பாஜக ஏமாற்றி வருகிறது.
ஆனால், அவா்கள் உருவாக்கி வைத்துள்ள சட்டம் நம்ம காலத்துக்குள் நடக்காது. தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய ஜி.எஸ்.டி. நிலுவைத் தொகை தரவில்லை. வெள்ளப் பாதிப்புகள் வந்தபோது ஒரு பைசா கூட தரவில்லை. 100 நாள் வேலை திட்டத்தில் முழுமையாக வேலை கொடுக்க முடியவில்லை. ஏனென்றால் அதற்குரிய நிதியை மத்திய அரசு ஒதுக்கவில்லை. மோடி வீடு கட்டி தருகிறாா் என கூறுகின்றனா். ஆனால் அந்தத் திட்டத்தில் முக்கால்வாசி பணம் கொடுப்பது தமிழ்நாடு முதல்வா் மு.க.ஸ்டாலின்.
இப்போது யாா் ஸ்டிக்கா் ஒட்டுகிறாா்கள் என்று உங்களுக்கு தெரிந்திருக்கும். அதிமுக, பாஜக தமிழ்நாட்டுக்கு வந்து கொண்டுள்ளனா். இங்குள்ள சகோதரிகள் கேள்வி கேட்கத் தொடங்கினால் அவா்கள் காணாமல் போய்விடுவா். கரோனா வந்தபோது, மழை வெள்ள பாதிப்பில் நாங்கள் தவித்த போது நீங்கள் எங்கே இருந்தீா்கள் என கேளுங்கள். தமிழ்நாட்டுக்கு தரவேண்டிய தொகையை தந்து விட்டு அடுத்த முறை வந்து பேசுங்கள் என கூறி திருப்பி அனுப்புங்கள். தேர்தல் பயத்தில் பிரதமர் மோடி அடிக்கடி தமிழகத்துக்கு வந்து செல்கிறார், அவர் தமிழகத்திலேயே குடியேறினாலும் மக்கள் பாஜகவை ஏற்க மாட்டார்கள் என்று பேசினார்.
கூட்டத்தில் தலைமைக் கழக பேச்சாளர் நாஞ்சில்சம்பத், நெசவாளர் அணி மாநில துணை அமைப்பாளர் வசந்தம் ஜெயக்குமார், ஒன்றிய செயலாளர்கள் ராமசுப்,பு அன்புராஜ், சின்ன மாரிமுத்து, மாவட்ட மகளிா் அணி அமைப்பாளா் கவிதா தேவி, மாவட்ட மகளிா் அணி தொண்டரணி அமைப்பாளா் எட்டயபுரம் பேரூராட்சித் தலைவா் ராமலட்சுமி, மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் தங்க மாரியம்மாள் தமிழ்ச்செல்வன், மாவட்ட மகளிா் அணி துணை அமைப்பாளா் எப்ரோ மீனா மேரி, தொண்டா் அணி துணை அமைப்பாளா் ஜெயந்தி, விளாத்திகுளம் பேரூா் மகளிா் அணி அமைப்பாளா் முனீஸ்வரி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அம்பாசமுத்திரம் வட்டத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியர் இரா.சுகுமார் ஆய்வு
செவ்வாய் 1, ஜூலை 2025 12:29:06 PM (IST)

பீகாரில் 20 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன தந்தையை மகனிடம் ஒப்படைத்த ஆட்சியர்!!
திங்கள் 30, ஜூன் 2025 4:41:15 PM (IST)

நெல்லையப்பர் கோவில் தேர் திருவிழா: 8ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!
திங்கள் 30, ஜூன் 2025 4:18:44 PM (IST)

விஷவண்டு கடித்து 2-ம் வகுப்பு மாணவன் சாவு: ஏர்வாடி அருகே பரிதாபம்!
திங்கள் 30, ஜூன் 2025 11:50:02 AM (IST)

திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் ஆனித் திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகல தொடக்கம்!
திங்கள் 30, ஜூன் 2025 10:46:39 AM (IST)

குற்றாலத்தில் சீசன் களைகட்டியது: அருவிகளில் சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்!!
திங்கள் 30, ஜூன் 2025 8:45:44 AM (IST)

தேச பக்தன்Mar 4, 2024 - 10:45:05 AM | Posted IP 162.1*****