» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
திருடனை கூட நம்பலாம்; திமுககாரனை நம்ப கூடாது - விந்தியா பரபரப்பு பேச்சு
செவ்வாய் 2, ஏப்ரல் 2024 8:06:04 AM (IST)
"உங்கள் வீட்டிற்கு வரும் திருடனை கூட நம்பலாம்; ஆனால் திமுக காரனை நம்ப கூடாது" என்று தேர்தல் பிரச்சாரத்தில் நடிகை விந்தியா பேசினார்.
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்துக் கட்சியினரும் தங்களது வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சிவசாமி வேலுமணியை ஆதரித்து நடிகை விந்தியா, மற்றும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ ஆகியோர் எட்டயபுரம் பகுதியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டனர்.
தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய நடிகை விந்தியா "திமுக கூட்டணி கட்சித் தலைவர்களையும், முதல்வர் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் என அனைவரையும் விமர்சித்து பேசினார். நீங்க திமுகவுக்கு ஓட்டு போடுவதும் குரங்குக்கு கோர்ட் போடுவதும் ஒன்னுதான். உங்கள் வீட்டிற்கு வரும் திருடனை கூட நம்பலாம். ஆனால் திமுக காரனை நம்ப கூடாது. திமுக ஒருவேளை ஜெயிச்சு ஆட்சிக்கு வந்தால் திமுக 500 ரூபாய்க்கு சிலிண்டர் கொடுத்தால் சிலிண்டர் இருக்கும் ஆனால் உள்ள கேஸ் இருக்காது.
திமுக தேர்தலுக்கு முன்னாடி ஒன்னு பேசுவாங்க பின்னாடி ஒன்னு பேசுவாங்க. திமுக தேர்தல் சமயத்தில் ஓட்டை பற்றி மட்டுமே கவலைப்படுவாங்க. தேர்தல் முடிந்தவுடன் வீட்டைப் பற்றி மட்டுமே கவலைப்படுவாங்க என்று பேசினார். தேர்தல் பிரச்சாரத்தில் முன்னாள் விளாத்திகுளம் எம்எல்ஏ சின்னப்பன், அதிமுக முன்னாள் சேர்மன் சத்தியா, எட்டையபுரம் நகரச் செயலாளர் ராஜகுமார், ஒன்றிய செயலாளர்கள் தனவதி மகேஷ் அதிமுக உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
RamsubbuApr 2, 2024 - 02:49:02 PM | Posted IP 172.7*****
correct than
ஆம்Apr 2, 2024 - 08:18:50 AM | Posted IP 172.7*****
எதிரி உண்மையைதான் சொல்லுவார்
RamsubbuApr 2, 2024 - 02:50:04 PM | Posted IP 172.7*****