» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
பொதுக்கூட்டத்தில் பங்கேற்க ராகுல் நெல்லை வருகை: தொண்டர்கள் உற்சாக வரவேற்பு
வெள்ளி 12, ஏப்ரல் 2024 4:49:26 PM (IST)
பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக நெல்லை வருகை தந்த ராகுல் காந்திக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தமிழ்நாட்டில் தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, பா.ஜ.க. கூட்டணி, நாம் தமிழர் என 4 முனைப்போட்டி ஏற்பட்டுள்ளது. தேர்தல் நெருங்கிவரும் நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையே, தமிழகத்தில் போட்டியிடும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று நெல்லையில் பிரசாரம் மேற்கொள்கிறார்.
நெல்லை உள்ளிட்ட 6 தென் மாவட்டங்களைச் சேர்ந்த பாராளுமன்ற தொகுதிகளில் போட்டியிடும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பாளையங்கோட்டை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் எதிரே அமைந்துள்ள தனியார் பள்ளி மைதானத்தில் பொதுக்கூட்ட மேடையில் பேசுகிறார். ராகுல் காந்தியுடன் இணைந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒரே மேடையில் பிரசாரம் மேற்கொள்கிறார்.
பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மதுரை வந்தடைந்தார். டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை வந்த ராகுல் காந்திக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிலையில், தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்க மதுரையிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் ராகுல் காந்தி நெல்லை வந்தடைந்தார். அவருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தேர்வினைக் கொண்டாடுவோம் சிறப்பு பயிலரங்கம் : நடிகர் தாமு பங்கேற்பு
வெள்ளி 20, ஜூன் 2025 8:47:57 PM (IST)

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் முன்னேற்பாடு பணிகள்: ஆட்சியர் இரா.சுகுமார் ஆலோசனை!
வெள்ளி 20, ஜூன் 2025 5:45:04 PM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு
வெள்ளி 20, ஜூன் 2025 5:28:41 PM (IST)

நெல்சாகுபடிக்கு சிறப்புத் தொகுப்புத் திட்டம் : ஆட்சியர் இரா.சுகுமார் தகவல்
வெள்ளி 20, ஜூன் 2025 3:55:50 PM (IST)

அரசு பஸ்சின் அச்சு முறிந்து சாலையில் ஓடிய சக்கரங்கள்: 3 மாணவர்கள் படுகாயம்!!
வெள்ளி 20, ஜூன் 2025 3:25:32 PM (IST)

வெளிநாட்டில் வேலை தருவதாக ரூ.10.87 லட்சம் மோசடி வழக்கில் பெண் கைது!
வெள்ளி 20, ஜூன் 2025 8:53:23 AM (IST)

peopleApr 12, 2024 - 08:55:57 PM | Posted IP 172.7*****