» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
பசுபதி பாண்டியன் ஆதரவாளர் வெட்டிக் கொலை : பாளையங்கோட்டையில் பயங்கரம்!
திங்கள் 20, மே 2024 4:21:33 PM (IST)
பாளையங்கோட்டையில் பசுபதி பாண்டியன் ஆதரவாளரை வெட்டிக் கொலை செய்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

நெல்லை மாவட்டம் மூன்றடைப்பு அருகே உள்ள வாகைகுளம் பகுதியை சோ்ந்தவர் சிவகுரு முத்துசாமி மகன் தீபக் ராஜா (30). இவர் இன்று மதியம் தனது நண்பர்களுடன் நெல்லை - திருச்செந்தூர் ரோட்டில் பாளையங்கோட்டை கே.டி.சி. நகர் அருகே உள்ள ஒரு ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு வெளியே வந்தார்.
அப்போது அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் முககவசம் அணிந்து பதுங்கி இருந்த 6 பேர் கும்பல் அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பிச் சென்றுவிட்டது. இதுகுறித்து உடனடியாக பாளையங்கோட்டை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. துணை கமிஷனர் ஆதர்ஷ் பசேரா, உதவி கமிஷனர் பிரதீப், இன்ஸ்பெக்டர் முத்துகணேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தீபக் ராஜாவிற்கும், மற்றொரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக அந்த தரப்பை சேர்ந்தவர்கள் தீபக் ராஜாவை கொலை செய்து இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
தீபக்ராஜா மீது 4 கொலை வழக்குகள், கொலை முயற்சி, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் இருப்பதாகவும், ரவுடி பட்டியலில் சேர்த்து கண்காணித்து வந்ததாகவும், பசுபதி பாண்டியனின் ஆதரவாளர் என்றும் போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லை மாவட்டத்தில் 19 புதிய வழித்தடங்களில் மினி பேருந்துகள் : ஆட்சியர் ஆணை வழங்கினார்!
புதன் 26, மார்ச் 2025 5:21:43 PM (IST)

நெல்லை ஜாகிர் உசேன் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்ற கோரி வழக்கு: டிஜிபி பதிலளிக்க உத்தரவு
புதன் 26, மார்ச் 2025 4:06:47 PM (IST)

மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து சீரானது: சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி
புதன் 26, மார்ச் 2025 10:58:11 AM (IST)

ஓய்வுபெற்ற காவல் அதிகாரி கொலை வழக்கு: தேசிய மனித உரிமை ஆணையம் விசாரணை
செவ்வாய் 25, மார்ச் 2025 5:28:42 PM (IST)

நெல்லை சரக டிஐஜி உட்பட காவல்துறை உயர் அதிகாரிகள் பணியிட மாற்றம்!
செவ்வாய் 25, மார்ச் 2025 4:32:51 PM (IST)

திருநெல்வேலியில் குழந்தைகளுக்கான நீச்சல் பயிற்சி முகாம்: ஏப்.1ம் தேதி துவங்குகிறது!
செவ்வாய் 25, மார்ச் 2025 12:30:33 PM (IST)
