» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

கடையநல்லூர் சாதனா வித்யாலயா பள்ளி சார்பாக பக்ரீத் தினம்

ஞாயிறு 16, ஜூன் 2024 11:21:41 AM (IST)கடையநல்லூர் சாதனா வித்யாலயா பள்ளி சார்பாக பக்ரீத் தினம் நடைபெற்றது. 

நிகழ்சிக்கு பள்ளி முதல்வர் மயில்கண்ணு ரமேஷ் தலைமை தாங்கினார். தாளாளர் ரமேஷ் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. முதல்வர் மயில் கண்ணு அவர்கள் தலைமையுரையில் தியாகத் திருநாள் அல்லது ஹஜ் பெருநாள், உலக அளவில் இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை ஆகும். இறைத் தூதர் இப்ராகீம் நபியின் தியாகத்தை நினைவுகூரும் விதமாக, ஒவ்வோர் ஆண்டும் இசுலாமிய நாட்காட்டியின் பன்னிரண்டாவது மாதமான துல் ஹஜ் மாதம் 10 ஆம் நாள் இது கொண்டாடப்படுகின்றது என்பதை மாணவர்களுக்கு தெரியப்படுத்தினார்.

பள்ளி ஒருங்கிணைப்பாளர் ஆசிரியை ஹஷீனா மசூதிகள் மற்றும் வீடுகளில் தொழுகையை நிறைவேற்றிய பின் குர்பானி என்ற பெயரில் விலங்குகள் பலியிடப்படுகின்றன. குர்பானி என்றால் தியாகம் என்று முஸ்லீம் பெரியவர்கள் கூறுகிறார்கள். குர்பானி கொடுப்பதற்கு முக்கிய காரணம் ஹஸ்ரத் இப்ராஹிமின் தியாகம் என்று முஸ்லிம்கள் நம்புகிறார்கள். மேலும் இயன்றதை இல்லாதோர்க்கு கொடுத்து உதவுக'என்ற கோட்பாடு தீவிரமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. 

ஆடு, மாடு, ஒட்டகம் என இஸ்லாமியர்கள் தங்கள் வசதிக்குத் தகுந்தவாறு இவைகளைப் பலியிட்டு (குர்பானி) அவற்றை ஏழைகளுக்குப் பகிர்ந்தளிக்கின்றனர். குர்பானி கொடுப்பது ஓர் உன்னதமான வழிபாடு என்று இஸ்லாத்தில் சொல்லப்பட்டுள்ளதாக  மாணவர்களுக்கு தெரியப்படுத்தினார்.  மாணவர்கள் அனைவரும் தங்களுக்குள் பக்ரீத் வாழ்த்துக்கள் தெரிவித்து அன்பை பகிர்ந்து கொண்டனர். இறுதியாக ஆசிரியை சிவரஞ்சனி நன்றி கூரினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsTirunelveli Business Directory