» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நீதிமன்றத்தில் ஆஜராகாமல் 16 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த சாமியார் கைது

ஞாயிறு 7, ஜூலை 2024 10:57:01 AM (IST)

நாங்குநேரி அருகே நீதிமன்றத்தில் ஆஜராகாமல் 16 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த சாமியார் கைது செய்யப்பட்டார்.

நெல்லை மாவட்டம் நாங்குநேரி தாலுகா ஏர்வாடி அருகே உள்ள வடுகச்சிமதில் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராமையா என்ற ராமச்சந்திரன். இவரை ஒரு திருட்டு வழக்கு தொடர்பாக கடந்த 2006-ம் ஆண்டு ஏர்வாடி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் ஜாமீனில் வெளியே வந்த ராமையா நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தொடர்ந்து 16 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்தார்.

இதையடுத்து நெல்லை மாவட்ட எஸ்பி சிலம்பரசன் உத்தரவுப்படி, நாங்குநேரி டிஎஸ்பி பிரசன்ன குமார் நேரடி மேற்பார்வையில் தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இந்த நிலையில் ராமையா திருவண்ணாமலையில் சாமியாராக தலைமறைவாக வாழ்ந்து வருவது தெரியவந்தது. இதுபற்றி தகவல் அறிந்த தனிப்படை போலீசார் திருவண்ணாமலைக்கு விரைந்து சென்றனர். அங்கிருந்த ராமையாவை நேற்று முன்தினம் கைது செய்து நீதிமன்றம் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsTirunelveli Business Directory