» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

மின்வாரிய ஊழியரை வெட்டிக்கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை : தென்காசி நீதிமன்றம் தீர்ப்பு

செவ்வாய் 22, அக்டோபர் 2024 8:25:51 AM (IST)

சேர்ந்தமரம் அருகே மின்வாரிய ஊழியரை வெட்டிக்கொன்ற வழக்கில் வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து தென்காசி நீதிமன்றம் தீர்ப்பு கூறியது.

தென்காசி மாவட்டம் சேர்ந்தமரம் அருகே உள்ள அருணாசலப்புரம் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகையா. இவர் மின்வாரியத்தில் ஒயர்மேனாக ேவலை செய்து வந்தார். இவர் திருமணத்திற்கு முன் வடநத்தம்பட்டியை சேர்ந்த காசியம்மாள் என்பவருடன் பழகியதாக கூறப்படுகிறது.

காசியம்மாளின் மகன் மூக்கையா என்ற டேவிட் (24). இவர் சண்முகையாவிடம் அவ்வப்போது தன்னை வாரிசாக அறிவிக்க கோரியும், சொத்து கேட்டும் தகராறில் ஈடுபட்டு வந்தார். இதற்கிடையே காசியம்மாள் இறந்துவிட்டார்.

கடந்த 1.1.2016 அன்று சண்முகையாவுக்கும், டேவிட்டுக்கும் இடையே மீண்டும் பிரச்சினை ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த சண்முகையா, டேவிட்டின் பிறப்பு குறித்து அவதூறாக பேசியதோடு, தனக்கு நீ பிறக்கவில்லை எனவும், உனக்கு எதற்கு சொத்து கொடுக்க வேண்டும் எனவும் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதனால் ஆத்திரம் அடைந்த டேவிட் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து சண்முகையாவை வெட்டிக் கொலை செய்தார். இதுதொடர்பாக சேர்ந்தமரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து டேவிட்டை கைது செய்தனர். இந்த வழக்கு தென்காசி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மனோஜ் குமார், குற்றவாளியான டேவிட்டுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பு கூறினார். அபாரதம் கட்ட தவறினால் கூடுதலாக 3 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் கூறினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் வேலுச்சாமி ஆஜரானார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory