» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடிச் சேர்க்கைக்கு கால அவகாசம் நீட்டிப்பு

சனி 19, அக்டோபர் 2024 3:25:02 PM (IST)

அரசு/தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் (ITI) பயிற்சியாளர்கள் நேரடிச் சேர்க்கைக்கு கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக பேட்டை, அரசு தொழிற்பயிற்சி நிலையம் துணை இயக்குநர்/முதல்வர் இரா.கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "அரசு/தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர்க்கைக்கு காலியாக உள்ள தொழிற்பிரிவுகளில் (இயந்திர வேலையாள்- 5 இடங்கள்/ கணிணி இயக்குபவர் மற்றும் திட்டமிடுதல் உதவியாளர்- 8 இடங்கள்) 2024-ஆம் ஆண்டிற்கான பயிற்சியாளர்கள் நேரடிச் சேர்க்கைக்கு 30.10.2024 வரையில் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர்க்கைக்கு அனுமதிக்கப்படும் பயிற்சியாளர்கள் உதவித்தொகை/ அனைவருக்கும் 5.750/- வீதம் மாதந்தோறும் மிதிவண்டி/ வருடத்திற்கு இரண்டு சீருடைகள் (தையற்கூலியுடன்)/ ஒரு ஜோடி மூடு காலணி/ பாட புத்தகங்கள்/ வரைபட கருவிகள் ஆகியவைகள் விலையில்லாமல் வழங்கப்படுகிறது. 

இப்பயிற்சியாளர்கள் பயிற்சி நிலையத்திற்கு வந்து செல்ல இலவச பஸ்பாஸ் மற்றும் சலுகை கட்டணத்தில் ரயில் பாஸ் பெற்று வழங்கப்படுகிறது. இவற்றுடன் அரசுப்பள்ளியில் 10-ம் வகுப்பு முடிய தமிழ் வழியில் படித்த மாணவியருக்கு புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் பயிற்சியினை நிறைவு செய்யும் வரை ரூ.1000/- பெற்று வழங்கப்படும். இதேபோல் மாணவர்களுக்கு தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ் ரூ.1000/- பெற்று வழங்கப்படும்

பத்தாம் வகுப்பு முடித்து ஒராண்டு/இரண்டாண்டு தொழிற் பிரிவுகளில் தேர்ச்சி பெற்றவர்கள் 11-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு மொழிப்பாடங்கள் (தமிழ் & ஆங்கிலம்) மட்டும் தேர்வு எழுதி 12-ம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் பெறலாம். இதேபோல் 8-ம் வகுப்பு முடித்து ஒராண்டு/இரண்டாண்டு தொழிற்பிரிவுகளில் தேர்ச்சி பெற்றவர்கள் மொழிப்பாடங்கள் (தமிழ் & ஆங்கிலம்) மட்டும் தேர்வு எழுதி 10-ம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் பெறலாம்.

பயிற்சியின் நிறைவில் மத்திய மற்றும் மாநில அரசு, முன்னணி தனியார் நிறுவனங்களில் அதிக வேலை வாய்ப்பு மற்றும் தொழிற்பழகுநர் பயிற்சி பெறவும் வளாகத் தேர்வு நடைபெறும். எனவே இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி தொழிற்கல்வி கற்று நல்ல வேலை வாய்ப்பினை பெற்று பயனடையுமாறு பேட்டை, அரசு தொழிற்பயிற்சி நிலையம் துணை இயக்குநர்/முதல்வர் இரா.கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory